வியாழன், 15 ஜனவரி, 2015

தை பிறந்தால் வழி பிறக்கும்

உலகெங்கும் உள்ளத் தமிழர்களால் பெருமிதத்தோடும் மகிழ்வோடும் கொண்டாடப்படும் விழா பொங்கல்... இளையவர்களும் கன்னிகளும் புத்தாடையணிந்து கொண்டாடி மகிழ்வர். ஊரே தென்னை, மாவிலைத் தோரணங்களால் நிறைந்திருக்கும். அறுவடை நடந்த வயலகளெங்கும் மக்கள் புதிய நெல்லை உரலில் இட்டு குத்திக்கொண்டிருப்பர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற வார்த்தை வெறும் வெற்று வார்த்தையல்ல... அது தமிழர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வாக்கியம்... இங்கிருக்கும் சில புகைப் படங்கள் பொங்கலின் பூரிப்பை உங்களுக்கு உணர்த்தலாம்.

புதன், 14 ஜனவரி, 2015

தைத்திருநாள் வாழ்த்துக்கள் 2015

”உலகெங்கும் பரந்து விரிந்திருக்கும் எமது தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எமது நிறுவனத்தின் உளம்கணிந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்”

வழக்கம்போல இந்த ஆண்டும் நமது பொங்கல் கலைப் பயணம் சிறப்பாக தொடங்கியிருக்கிறது. நமுடைய குழுவினரின் கிராமிய பொங்கலோடு நாட்டுப்புறப் பாடல்களையும் சத்தியம் தொலைக்காட்சியில் நாளை காலை 11 மணிக்கு காணத்தவறாதீர்கள்