வெள்ளி, 29 நவம்பர், 2013

மஞ்சளும் இஞ்சிகொத்தும்


தமிழர்களின் பாரமபரியங்களில் திருவிழாக்கள் முதலிடம் வகிக்கின்றது. அந்த திருவிழாக்களும் தமிழர்களின் கலாசாரங்களையும் வாழ்க்கை முறைகளையும் உலக மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பறைசாற்றி கொண்டேயிருக்கும் படியாகத்தான் திகழ்கின்றது.

தங்களுடைய தனித்திறன் வாய்ந்த நாகரிகத்தாலும் பண்பாட்டாலும் மொழியாலும் தமிழன் தமிழ் மொழியின் சிறப்பை உலகறிய செய்ய முயன்று வரும் வேளையில், தமிழனின் தலையாய திருவிழாவான பொங்கல் திருவிழாவின் போது தமிழன் தன்னுடைய மூதாதை கலாச்சாரமான மண் பானையில் இருந்து பித்தளை சில்வர் நோக்கி பயணிப்பதை கண்டு வேதனை கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும் என்று இருந்துவிடாமல், தமிழர்கள் உலக கலாச்சாரங்களை பின்னுக்கு தள்ளும் உயர்ந்த நாகரிகம் கொண்ட தமிழ் நாகரிக முறைமைகளை மீண்டும் செயல்படுத்த முயல வேண்டும்.

மஞ்சளும் இஞ்சிகொத்தும் கட்டி குடும்பத்தோடு பொங்கல் வைத்து மிகிழ்ந்த தமிழன் மண்பானையை மறந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டும் காணொளி இது. இதை பகிரும் போதே கடந்த காலம் ஒருமுறை நம் கண் முன்னே வந்து விட்டு செல்கின்றது.

காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=whJSCAOTHPo

தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா?


தமிழ் சினிமாவின் போக்கும், உண்மையான தமிழ் சினிமாவின் வகைகளையும் தெளிவாக விளக்கியிருக்கும் திரு தனஞ்செயன் அவர்கள் தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையை உங்களுக்கு பகிர்கிறோம்...


அண்மையில் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தேன். அதில் தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா என்பது பற்றி பலர் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அவர்கள் அனைவருமே தமிழ் சினிமா என்று வெளிவரும் அனைத்துச் சினிமாக்களையும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. அவை தமிழ் மொழியில் இருந்தாலும், அவற்றின் நோக்கங்கள் வேறு வேறு. பொதுவாகத் தமிழ் சினிமாவை நான்கு வகைப்படுத்தலாம்.

1. வெகுஜன சினிமா (அல்லது வணிகச் சினிமா): 
2. யதார்த்த சினிமா: 
3. அழகியல் சினிமா (அல்லது கலை அம்சம் கொண்ட சினிமா):  
4. புதுவகை சினிமா (நியோ-ரியலிஸ்டிக் மற்றும் நியோ-நாய்ர் சினிமா):  


 முழு கட்டுரையும் படிக்க இங்கே சொடுக்கவும் 
 http://tamil.thehindu.com/cinema/tamil-cinema


மூல பிரதி: தி இந்து தமிழ் நாளிதழ் 29/11/2013

தொடர்புக்கு: dhananjayang@gmail.com  


ஞாயிறு, 10 நவம்பர், 2013

புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு

 
                                            புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு கடந்த 8,9,10,தேதிகளில் மொரிசியஸ் தலைநகரில் நடந்தது. இதில் 40 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இருந்து புலம் பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர்.


                                           குறிப்பாக மலேஷியா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில், இனபடுகொலை செய்த இலங்கை அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

                                          மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் தமிழையும் தமிழர்களையும் முன்னேற்ற தகுந்த நடவடிக்கை எடுப்பதில் முனைப்புக் காட்டவேண்டும் என்றும், உலக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல் பட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்ட்டன.

                                           தமிழின் தொன்மத்தை உலகம் போற்ற உயர்த்திய மறைநூல் கண்ட தமிழன் திருவள்ளுவனை சிறப்பிக்க ஒரு தினம் உலக தமிழர்களால்  உருவாக்கப்படவேண்டும் என்றும் திட்டங்கள் முன்வைக்கபடட்டன.

                                         இனிவரும் காலங்களில் உலகில் தமிழினம் தன் தலை முறையையும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் காக்க வேண்டுமென்றால் தமிழர்கள் அனைவரும் இணைந்து ஒரு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

                                        மொரிஷியசில் நடந்த மாநாட்டின் காணொளி காண இங்கே சொடுக்கவும்.   http://www.youtube.com/watch?v=JmJ-jZsAI8o