சனி, 18 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துக்கள்.


தீபாவளி என்கிற பெயரில்... வெடி வெடிக்கிறேன் பேர்வழி என்கிற கணக்கில் மற்றவர்களை துன்புறுத்தாமல்., எல்லோருக்கும் எப்போதும் இன்பத்தை மட்டுமே நாம் கொடுக்க நினைக்கிற நல்ல சிந்தனையோடு புத்தாடையணிந்து, இனிப்புகள் செய்து எல்லோருக்கும் கொடுத்து, பகிர்ந்துண்டு இந்த நாளையும் சிறப்பாக கழிக்க முயற்சிப்போம் நண்பர்களே!

இந்த இனிய நாளில் நாம் கவனிக்க வேண்டியவைகள் சில இருக்கின்றன. அவற்றுள் பாதுகாப்பில்லாமல் வெடிமருந்துகளை கையாளுவதால் ஏற்ப்படும் விபரீதங்களை குழந்தைகளுக்கு விளக்கி சொல்வது நமது கடமை. கண்டிப்பாய் இதி நாம் ஒவ்வொருவரிடமும் சொல்ல வேண்டும். வெடிமருந்துகளால் புகை சூழும் உலகம் அந்த ஒரு நாளில் மட்டும் மிக மோசமான அளவில் மாசுபடுகிறது. அதை தவிர்ப்பதற்காக எதிர்கால நம்முடைய சந்ததிக்காக எவ்வளவோ வெடி பொருட்களை கொளுத்துவதில் சந்தோசம் கொள்ளும் நாம் தீபாவளி நினைவாக மரம் நடுவதில் அக்கறை செலுத்தலாம்... உறவினர்களுக்கும் எடுத்துரைக்கலாம்.

இந்த ஒரே நாளில் நிறைய இனிப்புகளையும், பிடித்தமான உணவுப் பொருட்களையும் எடுத்துகொள்வதால் வயிறு உபாதைகள் ஏற்ப்பட நாமே ஒரு காரணமாகிவிடுகிறோம்.. அதை தவிர்க்க போதுமானவற்றை நாம் எடுத்துகொண்டு இனிப்புகள் வாங்கமுடியாத மற்றவர்களுக்கும் கொடுத்து உதவலாம்... அவர்களில் மகிழ்வை நாமும் பங்கிட்டுக் கொள்ளலாம்.

நாகரிக பவனியில் உலாவரும் நமக்கு அருகில்  உடையில்லாமல் வாழ்கிற எத்தனயோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவருக்காவது நாம் உடை எடுத்து தரலாம்... நிச்சயம் அவர்கள் மனம் அதை பாராட்டும். நமக்கு நாகரிக அடையாளமாய் இருக்கிற உடை அவர்களுக்காவது மானம் காக்கும் அடையாளமாய் இருக்கட்டும்.

மத வேறுபாடு பார்க்காமல் நம்முடைய நண்பர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் இந்த தீப திருநாளை...


தீபாவளி வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 1 ஜூன், 2014

பொங்கல் இசை நிகழ்ச்சி

இந்த ஆண்டு  தைப் பொங்கல் நன்னாளில் இமயம் தொலைக்காட்சியில் நமது குழுவினரின் கிராமிய இசைநிகழ்ச்சி ஒளிபரப்ப பட்டது. அந்த காணொளியை உங்களுக்கு பகிர்கிறோம் பார்த்து மகிழுங்கள்






https://www.youtube.com/watch?v=UIeB61axXVU