வியாழன், 28 மார்ச், 2013

மலக்குழி மனிதர்கள்






கட்டுரை: அருள்செல்வி (செய்தியாளர்)

இன்றைய சூழலில் அனைத்து தரப்பினராலும் ஒதுக்கி விடப்படுகின்ற, சபிக்கப்படுகின்ற பிறவியாகவே துப்புரவு தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் இவர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் என்னவென்று தெரியுமா? ஒரு துடைப்பமும், ஒரு அலுமினியக் கூடையும்தான். இவ்விரண்டையும் கொண்டுதான் சமூகத்தின் இழிதொழில்கள் அனைத்தையும் செய்கிறார்கள்.

தமிழக அரசு துப்புரவு பணியாளர்களுக்கு தக்க பாதுகாப்பு உபகரணங்களையும், சுத்தம் செய்வதற்கான நவீன உபகரணங்களையும் வழங்காததால், துப்புரவு பணியாளர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இளம் வயதிலேயே மரணமடைதல் மற்றும் மலக்குழி, கழிவுநீர் தொட்டி ஆகியவற்றில் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதுகுறித்து இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தை சேர்ந்த 

அன்பு வேந்தனிடம் விசாரித்தபோது அவரிப்படிதான் சொன்னார்....

"மனித மலத்தை மனிதனே அல்லும் இதுபோன்ற கொடிய நிகழ்வை நிறுத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றமும் தடையாணை பிரப்பித்திருகிறது. இருப்பினும், இவை தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகின்றன. இதற்க்கு முதல் காரணம் அரசின் செயல்பாடுகள் சரியில்லை. இந்த தொழிலை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் தொழிலாக கருதி அவர்கள் மீது தீய சக்திகளின் தாக்குதல்கள் தொடர்ந்து ஏவப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றுவரை இதற்கான தீர்வு எட்டப்படவில்லை. பல்வேறு சமூக அமைப்புகள் போராடினாலும் அதற்க்கு அரசு செவி சாய்ப்பதும் இல்லை" என்று நம்மிடம் அவரது மனக்குமுறலை பகிர்ந்துகொண்டார்.






அசுத்த வேலை சூழல் காரணமாக மது மற்றும் இன்னும் பிற போதை பழக்கங்களுக்கும் அடிமையாகி வருகின்றனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்பட்டு குறைந்த வயதிலேயே மரணமும் அடைகின்றனர்.

உயிரிழக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுக்காப்புக்காக ஏதேனும் சட்டங்கள் இருக்கின்றதா?    

அந்த சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா?
பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்பவர்களை ஊடகங்கள் காட்சிப்படம் எடுத்தால் அதன்பிறகு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன?

இப்பணிகளில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களிடம் சென்று பேட்டி அளிக்கச்சொல்லி கேட்டபோது, பயத்துடன் விலகிக் கொண்டனர். எனினும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு தொழிலாளி அவர்கள் படும் துயரங்களை அழுகையுடன் நம்மிடம் விளக்கினார்.



அரசு அதிகாரிகளும் இதுகுறித்த தகவல்களை வழங்குவதற்கு முன்வருவதில்லை. அரசியல்வாதிகளும் இதை கண்டுகொல்வதுமில்லை. இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் நிகழாமல் இருப்பதற்கு பொதுமக்கள் என்ன செய்யலாம்?

நம் வீட்டு குழந்தைகளை, நம் வீட்டு கழவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்ய நாம் அனுமதிப்போமா?

எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் ஒரு சக மனிதனை வைத்து நம் கழிவுகளை எவ்வித உபகரணங்களும் இன்றி அகற்ற வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்?