திங்கள், 21 அக்டோபர், 2013

உலகின் மூல மொழி


உலகின் மூல மொழி தமிழே:-

தமிழ்தான் உலகின் முதல் மொழியும், அனைத்து மொழிகளுக்கும் மூல மொழியுமாகும். இதனை தொல்மொழியியலாராய்ச்சி (Linguistic anthropology) மற்றும் மொழியியல் தொல்லாராய்ச்சிக்கு (Linguistic archaeologists) உட்படுத்துவதன் மூலம் அறியியலாம்.

ஆங்கிலத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகளை காண்போம்.
(உதாரணம்) 1.Path - meaning is way

பாதை-வழி

பாதை என்பதும் - path என்பதும் ஒரே அர்த்ததில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபயோகப்படுத்தப்படும் ஒரு வார்த்தை. பாதை என்பதிலிருந்து path தோன்றியதா? அல்லது path என்பதிலிருந்து பாதை வந்ததா?

path - என்கின்ற ஆங்கில வார்த்தை எப்படி தோன்றியது? விளக்கம் தெரிந்தவர்கள் அறிய தரவும்.

பாதை என்றால் என்ன - வழி (way-வழி). வழி எப்படி தோன்றும் மனிதர்கள் நடந்து, நடந்து (மனிதர்கள் மட்டுமல்ல - மிருகங்கள் நடந்தாலும்) பாதை தோன்றும். அதாவது பாதம் தேய - பாதை தோன்றும். பாதம் + தேய் = பாதேய் ........இன்று பாதை -யாக உள்ளது.

ஆக தமிழிலிருந்துதான் ஆங்கிலத்திற்கு பாதை - PATH சென்றிருக்கிறது. இரு மொழிகளிலும் ஒரே அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.



(உதாரணம்) 2.EDITORIAL

EDITORIAL - எடிட்டோரியல் = ஏடு+இட்டோர்+இயல்

அதாவது ஏடு இடுபவர் தன் கருத்துக்களை வைக்கும் இடமே editorial. ஏடு இட்டோர் இயம்பும் கருத்துக்களே editorial. தமிழில் உள்ள அதே கருத்து - அர்த்தம்தான் ஆங்கிலத்திலும் உள்ளது.

ஆக தமிழில் இருந்துதான் ஆங்கிலத்திற்கு editorial என்னும் வார்த்தை சென்றிருக்கிறது. மூலம் தமிழே.

தமிழில் இருந்து பிறமொழிகளில் வழ்ங்கும் மற்ற சொற்களையும் பதிவிடுங்களேன்.


நன்றி: மூலப்பிரதி - யாழ் இணையம்  (தமிழ் - உலகின் முதல் மொழி, மூல மொழி)

சனி, 19 அக்டோபர், 2013

கலை பண்பாட்டுத்துறைக்கு ரூ.1 கேடி நிதி





சென்னை, அக்.16 - கலை பண்பாட்டுத்துறை நிகழ்ச்சிகளுக்காக ரூ.1 கேடி நிதியையும், சென்னை அருங்காட்சியகத்தில் புதிதாக இருப்பறை அமைக்க ரூ.1 கோடி நிதையை அளிக்கவும் முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுல்ள செய்தியில் கூறியிருப்பதாவது:_

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளைப் பேணிப் பாதுகாத்தல், அக்கலைகளில் <ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், பாரம்பரிய கலைகள் அழிந்துவிடா வண்ணம் இளைஞர் சமுதாயத்திற்கு கொண்டு செல்லுதல் போன்ற  திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதாவால், அவர்களது  முந்தைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளின் கீழ் இருந்த கலை மற்றும் பண்பாடு சம்பந்தமான பல்வேறு பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு,  கலை பண்பாட்டுத் துறை என ஒரு தனித்துறை  1991 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

நுண்கலைகளையும், நிகழ்த்துக் கலைகளையும் போற்றி, பாதுகாத்து வளர்ப்பதற்காக கலை பண்பாட்டுத் துறை சார்பாகவும், பிற அரசுத் துறைகள் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்தும் தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் அயல் நாடுகளுக்கிடையேயான கலை பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ஒன்று அல்லது இரண்டு கலை நிகழ்ச்சிகளும், மாநிலங்களுக்கிடையேயான கலைப் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஐந்து அல்லது ஆறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.  மேலும் அனைத்து மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும் வகையில் மாநில கலை விழா, மார்கழி இசை விழா, மாநில அளவிலான நுண்கலைக் காட்சி, நாட்டியாஞ்சலி, சுற்றுலா தலங்களில் கலை நிகழ்ச்சிகள் போன்று தமிழகத்தின் கலாசார வளத்தினை விளக்கும் வகையில் பல்வேறு  நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.    இதன் மூலம், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியம்  உலகறியச் செய்யப்படும்.

சென்னை அரசு அருங்காட்சியகம் உலகில் மிகவும் பழமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இந்த அருங்காட்சியகம் 160 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.  இந்த அருங்காட்சியகத்தில் சேமிப்பில் உள்ள அரும்பொருட்களை ஒளி அமைப்பு, காட்சிப்படுத்துவதற்கு மேடை அமைப்பு, காட்சிப் பெட்டிகள், பெயர் அட்டைகள், அறிவுசார்ந்த முறையில் வகைப்படுத்துதல் போன்றவையுடன் கூடிய இருப்பறை ஒன்றை கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் பூண்டிக்கு அருகிலுள்ள கொற்றலையாற்றுப் பள்ளதாக்குப் பகுதியிலும், அதனை அடுத்துள்ள அல்லிக்குழி மலைத்தொடரின் சமவெளிப் பகுதிகளிலும் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.  இதனைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் பூண்டியில் தொல்லியல் துறையின் சார்பில் தமிழகத்தின் பழங்காலத்தை விளக்கும் வகையில் 'தொல் பழங்கால அகழ்வைப்பகம்' ஒன்று 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இவ்வகழ்வைப்பகத்தில் `பொதுமக்களின் பார்வைக்காக பழைய கற்காலக் கருவிகள், நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்த பெரிய <மப்பேழை கல்மரம், நிலயியல் படிமங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த அகழ்வைப்பக வளாகத்தில்  20 லட்சம் ரூபாய் செலவில் "தொழில் பழங்கால பூங்கா'' ஒன்றினை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பூங்காவில்  தொல் பழங்கால வாழ்க்கை முறையினை அறியும் வகையில் பெரிய அளவிலான உருவங்கள், இக்கற்கால பகுதியில் காணப்பட்ட நீல்காய், குதிரை, காட்டு எருமை  ஆகிய விலங்குகளின் உருவங்களை காட்சிப்படுத்துதல்,  இவைகளுடன் யானை, டைனோசரஸ், காட்டுப் பூனை, காண்டா மிருகம் ஆகிய விலங்குகள் மற்றும் அழிந்த பறவைகளின் உருவங்களை காட்சிப்படுத்துதல், பழங்கால மனிதன் கல் ஆயுதங்களைக் கொண்டு காட்டு எருமையை வேட்டையாடுதல் மற்றும் இழுத்தல், கிழித்தல் போன்றவற்றை பெரிய வடிவங்களாக அமைத்தல், குகை மாதிரி அமைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மூலப் பிரதி: தினபூமி 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

அவ்வைகலைக்  கூடத்தின்   நிறுவனர் அவ்வைப்பிரியன் சேகர் அவர்களை உங்கள் anaivarukkum அறிமுகப் படுத்துகிறேன்.