வெள்ளி, 30 நவம்பர், 2012

காட்டுமன்னார்குடி


முன்னொரு காலத்தில் வீரநாராயண பெருமாள்புரம் என்றழைக்கப்பட்டமுதலாம் பராந்தக மன்னனால் உருவாக்கப்பட்ட காட்டுமன்னார்குடி கடலூர் மாவட்டத்தின் ஏழு வட்டங்களுள் ஒன்று. இதை தலை நகராக கொண்டு 161 கிராமங்கள் இயங்கி வருகின்றன. வைணவ மக்கள் பெரிதும் மதிக்கும் நாதமுனிகள் அவதரித்த தளம் இது. அதுமட்டுமில்லாது திரு ஆளவந்தார் அவதரித்த தளமும் இதுவாகும். சைவ திருமுறை பாடிய திருமூலர் அவதரித்த தளமும் இதுவேயாகும்.  கல்வெட்டுகளில் வீரநாராயண சதுர்வேத மங்கலம் என குறிப்பிட பட்டிருக்கிறது. பின்னாளில் சாதிய சிந்தனைகளை உடைத்து தூர எறிந்த மாபெரும் தலைவர் சகஜானந்தர் அவதரித்த தளமும் இதுவாகும். தலித் தலைவர் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு குழுவின் முதல் தலைவர் எல் இளையபெருமாள் அவர்களும், சாதிய பிரச்சினைகள் இருப்பினும் அணுகுமுறையால் சிறப்பாக மற்றவர்களிடம் பழகிய எம் ஆர் கே  அவர்களும் இங்கே பிறந்து மக்களுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள்.காலபோக்கில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு பல மாறுபாடுகளை பெற்று திகழும் இந்த நகரத்திற்கு சுதந்திர போராட்ட காலத்தில் பல தலைவர்கள் வந்து மக்களிடையே உரைவீச்சாற்றியிருப்பதை பல பக்கங்கள் நினைவுபடுத்துகின்றன. இசுலாமிய மக்களும் கிருத்துவ மக்களும் இந்து பிரிவினர்களும் சிறு சிறு தொய்வுகளையும் தாண்டி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் நடுவே அமைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் இது ஒரு சட்டமன்ற (தனி) தொகுதியாகவும் செயல்பட்டு வருகின்றது. இதன் வடக்குப்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி உள்ளது. காட்டுமன்னார்குடியின் கட்டுபாட்டில் உள்ள கிராமங்கள்.
  1. ஆனந்தகுடி
  2. கொக்கரசன்பேட்டை
  3. மதகளிர்மாணிக்கம்
  4. ஸ்ரீசாத்தமங்கலம்
  5. குணமங்கலம்
  6. மேல்புளியங்குடி
  7. கள்ளிப்பாடி
  8. அய்யன்கீழ்புளியங்குடி
  9. கீழ்புளியங்புடி
  10. ஸ்ரீபுத்தூர்
  11. நகரப்பாடி
  12. ஸ்ரீவக்கரமாரி
  13. ஸ்ரீமுஷ்ணம்
  14. தொராங்குப்பம்
  15. ஸ்ரீஆதிவராகநல்லூர்
  16. தேத்தம்பட்டு
  17. கொழை
  18. சாத்தவட்டம்
  19. ஸ்ரீநெடுஞ்சேரி
  20. கூடலையாத்தூர்
  21. கானூர்
  22. வளச்காடு
  23. குறிஞ்சிக்குடி
  24. பேருர்
  25. காவல்குடி
  26. முடிகண்டநல்லூர்
  27. மழவராயநல்லூர்
  28. குமாரக்குடி
  29. கோதண்டவிளாகம்
  30. நங்குடி
  31. நந்தீஸ்வரமங்கலம்
  32. வட்டத்தூர்
  33. புடையூர்
  34. சோழட்டிரம்
  35. பாளையம்கோட்டை (கீழ்பாதி)
  36. வடக்குப்பாளையம்
  37. பாளையம்கோட்டை (மேல்பாதி)
  38. இராமாபுரம்
  39. கொண்டசமுத்திரம்
  40. மாமங்கலம்
  41. அகரப்புத்தூர்
  42. வானமாதேவி
  43. சுத்தமல்லி
  44. திருசின்னபுரம்
  45. கொல்லிமலை மேல்பாதி
  46. நாட்டார்மங்கலம்
  47. கருணாகரநல்லூர்
  48. பழஞ்சநல்லூர்
  49. வீராணநல்லூர்
    1. உடையார்குடி
  50. மன்னார்குளக்குடி
  51. வடக்கு குளக்குடி
  52. லால்பேட்டை
  53. எள்ளேரி( கி )
  54. எள்ளேரி(மே)
  55. கொல்லிமலை கீழ்பாதி
  56. மாணிய ஆடுர்
  57. நத்தமலை
  58. ராயநல்லூர்
  59. கந்தகுமாரன்
  60. கலியமலை
  61. பூரத்தான்குடி
  62. உத்தமசோழகன்
  63. டி.புத்தூர்
  64. கொத்தங்குடி
  65. லட்சுமிகுடி
  66. செட்டிக்கட்டளை
  67. ஆள்கொண்டநத்தம்
  68. சிவக்கம்
  69. ராதாநல்லூர்
  70. கொத்தவாசல்
  71. மேலநெடும்பூர்
  72. களிகடந்தான்
  73. நெய்வாசல்
  74. தொரக்குழி
  75. சோழக்கூர்
  76. வளத்துர்திருபணியபுரம்
  77. மேல்வன்னியுர்
  78. ஒப்ளாஞ்சிமேடு
  79. கீழ்நெடும்பூர்
  80. பரவிளாகம்
  81. வடமூர்
  82. கூடுவெளி
  83. தெம்மூர்
  84. மெய்யாத்தூர்
  85. கீழ்வன்னியூர்
  86. வானாதராயன் பேட்டை
  87. வீரநத்தம்
  88. சுறாவிழுந்தூர்
  89. கீழ்அதமாங்குடி
  90. வெளவால்தோப்பு
  91. புள்ளையாந்தாங்கல்
  92. நடுத்திட்டு
  93. திருநாரையூர்
  94. சர்வராஜன் பேட்டை
  95. இடையார்
  96. குப்பபிள்ளைசாவடி
  97. திருமூலஸ்தானம்
  98. கோவில்பத்து
  99. கீழராதாமூர்
  100. மேல்ராதாமூர்
  101. ராஜேந்திர சோழகன்
  102. மன்னார்குடி
  103. குருங்குடி
  104. குப்பங்குழிபூவிழந்தூர்
  105. பெரியகோட்டகம்
  106. கீழ்கடம்பூர்
  107. செட்டித்தாங்கல்
  108. வீராநந்தபுரம்
  109. மேல்கடம்பூர்
  110. வேளாம்பூண்டி
  111. தொரப்பு
  112. ஷண்டன்
  113. பலவாய்கிண்டன்
  114. ஈச்சம்பூண்டி
  115. சிறுகாட்டூர்
  116. கஞ்சாங்கொல்லை
  117. ஆச்சாபுரம்
  118. எய்யலூர்
  119. அருமுழிதேவன் (டி)
  120. கீழ்புளியம்பட்டு
  121. ரெட்டியூர்
  122. ஆதனூர் (மன்னார்குடி)
  123. குணவாசல்
  124. மேல்பக்கத்துறை
  125. ஆயங்குடி
  126. குச்சூர்
  127. உமாம்புலியூர்
  128. முட்டம்
  129. மோவூர்
  130. அழிஞ்சிமங்கலம்
  131. கானாட்டாம்புலியூர்
  132. குஞ்சிமேடு
  133. கருப்பேரி
  134. வீரசோழபுரம்
  135. ஆழங்காத்தான்
  136. தொண்டமாநத்தம்
  137. ஓடையூர் (மன்னார்குடி)
  138. மாதர்சூடாமணி
  139. கூத்தூர்
  140. புலியங்குடி (மன்னார்குடி)
  141. மன்னார்குடி (அரசூர்)
  142. வெட்சியூர்
  143. வெண்ணையூர்
  144. கொமராட்சி
  145. கீழ்கரை
  146. நந்திமங்கலம்
  147. அத்திப்பட்டு
  148. தெற்குமாங்குடி
  149. வடக்குமாங்குடி
  150. கருப்பூர்
  151. நளம்புத்தூர்
  152. முள்ளங்குடி
  153. கீழ்பருத்திகுடி
  154. காஞ்சிவாய்
  155. மேல்பருத்திகுடி
  156. இளங்கம்பூர்
  157. வெள்ளுர்
  158. சிதம்பர அரசூர்

வியாழன், 29 நவம்பர், 2012

இசை பற்றிய அரிய வரலாற்றுப் பதிவு

(நன்றி: சா.தேவதாஸ் - கீற்று இணைய இதழ்)



இசையென்று ஒன்றை தெரிவு செய்து அதன் வரலாற்றை நாம் தேர்ந்து கொள்ளத்தான் வேண்டுமென்றால்...இந்த பக்கங்களை படிக்காமல் நிச்சயம் தெரிந்துகொள்ள முடியாது. இன்றுவரை சுப நிகழ்ச்சிகளின்   நாத சுரத்துக்கு எந்த இசைக்கருவி ஈடாக இருக்கமுடியும் என்கிற சந்தேகம் எல்லோருக்கும் உண்டு. எனக்கும்தான்...அந்த வகையில் தமிழிசை என்று வந்தபிறகு ராகங்களை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகி விடுகிறது. அதோடு  சா. தேவதாஸ் அவர்கள் கீற்று இணைய இதழில் எழுதிய இசைப் பற்றிய பதிவை உங்களுக்காக இதை பகிர்கிறேன்.

இந்த நூல் நாகசுர முன்னோடிகளுள் தலைசிறந்தவரான இராஜரத்தினம் பிள்ளை அவர்களைப் பேசுவதுடன், நாகசுரத் தைப் பற்றியும் பேசுகிறது. இராஜரத்தினம் பிள்ளையின் அரிய புகைப்படங்களைச் சேகரித்துத் தந்திருப்பதுடன் முகவீணை, திமிரி நாயனம் என்னும் நாகசுரப் பரிணாமத்திற்கு ஆதாரமாயுள்ள, சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்பங்களையும் புகைப்படங்களாகத் தந்துள்ளது. மறைக்கப்பட்டிருந்த இசை வரலாற்றின் ஒரு பக்கத்தினைப் பதிவு செய்கின்றது.

தமிழக / தென்னிந்திய இசை வரலாறு மிகவும் சிக்கல் நிரம்பியது. தவறான அணுகுமுறையில் தப்பும் தவறுகளும் மிகுந்தது. திருகல் முருகலானது. அடிப்படை ராகங்கள் 72, இல்லை 32தான் என்பதிலிருந்து எதிரும் புதிருமான நிலைபாடுகள் கொண்டது. இவற்றுடன், பேசப்படாது மௌனம் சாதித்த நிலையும் உண்டு.

குறிப்பாக, இசை வேளாளர்களின் பங்கு தென்னிந்திய இசை வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். அவர்கள் பேணிக் காத்த சின்ன மேளம் என்னும் பரதம் மேட்டுக்குடி யினரால் எடுக்கப்படும்; ஆனால் தேவதாசி முறை ஒழிப்பில் இசைவேளாளரும் ஒழிக்கப்படுவதற்கான முயற்சி தொடங்கும். பெரிய மேளம் என்னும் நாகசுரம் பிற வகுப்பாரால் தீண்டப்படாது ஒதுக்கியே வைக்கப்படும் இன்று வரையும். அபூர்வமாக ஒரு சின்ன மௌலானாவும் திருவிழா ஜெயசங்கரும் தென்படுவார்கள்.

இதில் சுவையானது, இது பற்றி ராஜாஜியும் பேசியிருப்பதுதான். காரணகர்த்தாவே விளைவு குறித்து நொந்துபோவது மிகமிக சுவைமுரண் கொண்டதல்லவா! ""மிக உயர்வான இக்கலை நம்நாட்டில் ஒரே ஒரு சாராரால் மட்டுமே கையாளப்படுவதை உணரும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. விரைவில் இந்த வாத்தியத்தை எல்லா வகுப்பினருமே நன்கு கற்றுத் தேற வேண்டும்...” (பக். 104).

நாகசுரத்தின் இன்றைய வடிவமைப்புக்கும் கீர்த்திக்கும், காருகுறிச்சி அருணாசலம் என்னும் கலைஞன் உருவாக்கத் திற்கும் அடிப்படையாக இருந்த இராஜரத்தினம் எப்போதும் போற்றிய கலைஞர்கள் - நாகசுரத்தில் - பக்கிரி நாயனக்காரர், மன்னார்குடி சாரநாத நாயனக்காரர் மற்றும் திருச்சேறை முத்துகிருஷ்ணன். அதுபோலவே, வீணை தனம்மாள், எஸ்.ஜி. கிட்டப்பா, மணிக்கொடி எழுத்தாளர்கள் முதலானவர்களிடம் அவர் நெருக்கமாக இருந்திருக்கிறார். கலைஞனின் கர்வத் துடனும் உற்சாகத்துடனும் உல்லாசத்துடனும் வாழ்ந்திருக்கிறார்.

கேலி கிண்டலுடன் சந்திப்புகளைக் கலகலப்பாக்கி இருக்கிறார். எது எப்படி இருப்பினும், இசை என்று வரும்போது, இறுதி மூச்சு வரையும் விடாத சாதகமும், முழுமையான அர்ப்பணிப்பும் கொண்டு, புதுப்புது உருவங்களில் ராகங்களை இழைத்திடுவதில் மட்டும் விட்டுக்கொடுத்தல் கிடையாது.

செம்பொன்னார் கோயில் ராமசாமிப்பிள்ளை, மதுரை பொன்னுசாமி நாயனக்காரர், மன்னார்குடி பக்கிரியா பிள்ளை போன்றோரின் இசை கேட்டு, உத்வேகம் கொண்டு, அவற்றை அப்படியே திருப்பித் தந்துவிடாமல், தன் மனோதர்மப்படி ராகங்களைப் படைத்திருப்பது ராஜரத்தினத்தின் தனிச்சிறப்பாகும். வாய்ப்பாட்டில் அவர் பெற்றிருந்த பயிற்சி இதற்குப் பெரிதும் துணை புரிந்துள்ளது. வீணை தனம்மாளின் வீணை இசையிலிருந்து இசை நுட்பங்களை உள்வாங்கிக்கொண்ட அவர், "எனது கடைசியான குரு ஸ்ரீமதி வீணை தனம்மாள்” என்று குறிப்பிட் டுள்ளார். ராஜரத்தினத்தின் குரலை "ஒரு சங்கிலிருந்து வெளிவரும் நாதம் போல் ஒலிக்கிறதுஃ என்கிறார் எழுத்தாளர் கு. அழகிரிசாமி.

"நாதசுரம்” என்னும் பெயர் இன்றைய வழக்கு. "நாகசுரம்” என்பதே "நாதசுர’மாகியுள்ளது. "நாகசுரம்” என்பது "நாகசாரம்” என்பதனின்றும் பிறந்தது. இதில் "நாக’ என்பது ஏன் இடம் பெற்றது? நாகர்கள் (பழங்குடியினர்) பயின்ற கருவி என்னும் பொருளில் "நாக சின்னம்” "நாகசாரம்” என்னும் வழக்குகள் வந்தன என்கிறார் ஆசிரியர் (பக்.7). "நாக’ என்பது வேறு பொருள்களிலும் வழங்கியுள்ளதை தமிழ்ப் பேரகராதியில் காணமுடிகின்றது. "நாகசம்பங்கி’ என்பதில் "நாகஃ என்பது சிறு இலைகளைக் குறிக்கின்றது; "நாககேசரம்” என்றால் சிறுநாகப்பூ. இன்னொரு பொருளமைதி: "நாகம்” என்பது ஒரு குறிஞ்சிப் பண்ணைக் குறிக்கின்றது; "நாகணவாய்ப் புள்” என்றால் மைனா.

"நாக செண்பகம்” என்பதற்கு ‘common yellow trumpet flowered tree’ என்று விளக்கம் தரப்படுகிறது. இந்த உதாரணங்கள் மற்றும் விளக்கங்களிலிருந்து, நாகம் - நாக என்னும் சொல் முன்னொட்டுக்கு சிறிய-குறுகிய- இசை தொடர்பானது என்னும் பொருள்கள் உண்டென்று அறியலாம். ஆதலின் "நாகர்கள்” என்பதிலிருந்து பிறந்தது என்பதை விடவும், மேற்கொண்ட பொருளமைதி கொண்ட முன்னொட்டாகவே இடம்பெற்றுள்ளது என்பது பொருத்தமாக அமையும்.

"இசைக்கருவிகளால் புகழடைந்தவர் சிலர். வயலின் சவுடய்யா, புல்லாங்குழல் மாலி. ஆனால் இராசரத்தினம் பிள்ளையால் புகழ் அடைந்தது நாகசுரம்” என்று முன்னுரையில் எழுதுகிறார் நா. மம்மது. ஏற்கனவே வீணை தனம்மாள் பற்றியும் கே.பி. சுந்தராம்பாள் பற்றியும் நூல்கள் எழுதியுள்ள திரு. ப. சோழ நாடனின் இன்னொரு வரலாற்றுப் பதிவு இந்த நூலாகும். முக்கிய மான நாகசுர மற்றும் தவில் கலைஞர்களது பட்டியலுடன் வெளி வந்துள்ள இந்நூல், ஒவ்வொரு நூலகத்திலும் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வாசகனிடத்தும் இருக்கவேண்டிய ஒரு பிரதியாகும்.

நாகசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு, ப. சோழநாடன், நிழல், 2005, பக். 120, விலை. ரூ.60.

எழுத்தாளர் எஸ். பாலபாரதி சொல்லும் கும்மி

எழுத்தாளர் எஸ். பாலபாரதி அவர்கள் கும்மியின் சுவடுகளை நம்முன் எடுத்து வைப்பதை நான் உணர்ந்த வாறே நீங்களும் உணர வேண்டும் என்கிற முனைப்போடு அண்ணாரின் பதிவை உங்களுக்கும் பகிர்கிறேன். மத்திய தர மக்களின் மன நிலையை படம் பிடிக்கிறார். காலத்தால் அழிக்கமுடியாத கிராமிய கலைகளை நாமே மேற்க்கத்திய மோகத்தால் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து எப்போது திருந்துவது?


(நன்றி: எஸ்.பாலபாரதி)

“கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?

னிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார்.

அப்படி எல்லாம் எந்தவொரு உள்நோக்கமும் இன்றியே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில் கும்மி  என்பது  தமிழ்ச்சாமிகள்  சார்ந்து  ஆடப்படும்  ஒரு ஆட்டமாக இன்றும்  தென் மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முளைப்பாரி வளர்த்து ஒரு வாரம் நடக்கும் நிகழ்ச்சியில் ஆண்கள் ஒயில் ஆட, பெண்கள் குழு கும்மி அடித்து ஆடும். இதில் வயது பாகுபாடெல்லாம் கிடையாது. என் அம்மாச்சியும் ஆடியிருக்கிறாள்கூடவே, என் அம்மாவும். இவர்கள் இருவருடனும் என் அக்காவும் ஆடி இருக்கிறாள். இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் எதுவெனில்.. இந்த ஒயில், கும்மியாட்டம் என்பது மத்தியதர, கடைநிலை சாதியர்களின் ஆட்டமாகவே இருந்து வந்திருக்கிறது.

 எந்தவொரு உயர்சாதியினரும் இந்த ஆட்டத்தை ஆடுவதில்லை. உழைக்கும் மக்களின் களைப்பு தீர ஆடிப்படும் நிகழ்வாகவே இதனை பார்ப்பதும் உண்டு. திருவிழா அல்லாத சமயங்களில் வெறும் பெண்களின் களைப்பு நிவர்த்தி பாடலுடன் நின்று போகும். ஆண்கள் வஸ்தாவியின் ஒயில் வகுப்புக்கு போவதை வழக்கமாக இன்றும் பல பகுதிகளில் கொண்டுள்ளனர். (என்னுடைய ”கோட்டி முத்து” கதையில் இது பற்றி எழுதிய நினைவு இருக்கிறது.)

ஆண்களின் ஓயில் ஆட்டத்தை விட, பெண்களின் கும்மியாட்டம் அதிக பார்வையாளர்களை கொண்டதாகவும், சுவையான இசை வடிவமாகவும் இருந்து வந்துள்ளது. பெண்களின் ஆட்டத்தை காண கூடும் கூட்டத்தினால் வெறுப்புற்ற ஆண்வர்க்கம். ஒரு உத்தியை கையாண்டது. ஒயில் பக்கம் அதிக பார்வையாளர்களை திருப்புவதற்கு ஒரு குழுக்களிடையே போட்டிகள் வைத்து, கிராம அளவில் அதை வணிகப்படுத்தியது. சின்ன சின்ன ஸ்பான்சர்களைப் பிடித்து, ஒயில் போட்டியினை நடத்தத்தொடங்கியது. ஒயிலை வணிகப்படுத்தும் வேலைகள் வெற்றியடைந்தபின் தான் கும்மியின் பக்கம் பார்வையாளர்கள் கூட்டம் குறையத்தொடங்கியது என்பது உண்மை.

”ஆனை வாரதப் பாருங்கடி- அது
அசைச்சு வாரத்தப்பாருங்கடி..” என்ற பிரபலமான கும்மிப் பாடலே இளையராஜாவால் சினிமாவுக்கு கடத்திவரப்பட்டு,
“ஆயிரம் தாமரை மொட்டுக்களே- வந்து
ஆனந்த கும்மி தட்டுங்களேன்” என்று உருமாற்றமாகி, பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. (கிராமிய இசை வடிவங்களில் இருந்து சினிமாக்காரர்கள் களவாடிய மெட்டுக்கள் குறித்து தனி புத்தகமே போடலாம்)

என் அம்மாச்சி தொடங்கி என் அக்காள் வரை ஆடிய கும்மியை மீட்டு எடுத்து, மீண்டும் ஆடவைக்க முடியாவிட்டாலும்…, நினைவிலாவது இந்த பெயரை வைத்திருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமின்றி வேறு எந்தவொரு நோக்கமும் இல்லை என்று நிச்சயமாக நம்பலாம்.
நீங்கள் குறிப்பிட்டது போல கும்மி ஆட்டம் என்பது ஒன்றுக்கும் உதவாதது என்று ஆண்களாலும், உயர்சாதியினத்தவராலும் பரப்பப்பட்ட பொய்யன்றி வேறெதுமில்லை என்பதையும் உணர்க!

சகஜானந்தர்

மூடர்களின் சாதிய சிந்தனையில்லாமல் தென்னார்க்காடு வள்ளலார் மாவட்டத்தில் பிறந்த எவரும் சுவாமி சகஜானந்தர் குறித்து அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில், சகஜானந்தர் குறித்த செய்திகளை சுருக்கமாக பதிக்கிறோம். இந்த செய்திகளை மின் இதழில் எழுதியமைக்காக ம.வெங்கடேசன் அவர்களுக்கு எங்கள் நன்றியை பதிவு செய்கிறோம். அந்த கட்டுரையை அப்படியே மாற்றமில்லாமல் உங்களுக்கும் தருகிறோம்.


சுவாமி அயோத்தி தாச பண்டிதர் குறித்து  ஜெயமோகன் & மற்ற பலர் எழுதியுள்ளார்கள்.

எப்போதுமே தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றம், இந்து சமய வளர்ச்சி ஆகியவைகளை தம் வாழ்நாள் முழுவதும் குறிக்கோளாக கொண்டு அதற்காக செயலாற்றிய ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமென்றால் நாம் சுவாமி சகஜானந்தரை மட்டுமே காட்ட முடியும். தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர். தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்கள் அல்ல என்று உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப் பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையிலும் கூட தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபித்து அதை தாழ்த்தப் பட்டவர்களிடையே பிரச்சாரமும் செய்தவர் நமது சுவாமிஜி. அவருடைய வாழ்க்கையிலிருந்து நிறைய செய்திகளை நாம் கற்றுக் கொள்வதற்கு இருக்கிறது.

தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிறிஸ்தவம் கல்வி கொடுத்து முன்னேற்றியது என்ற பிரச்சாரம் சகஜானந்தர் வாழ்வில் பொய்யாகிப் போனது. அவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி வழங்கியதற்கான காரணம் சகஜானந்தரின் வாழ்வின் மூலம் உலகுக்கு வெளிப்பட்டது. அமெரிக்கன் ஆர்க்காடு சமயப் பரப்பாளர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர் அங்கு தீண்டாமையின் கோர முகத்தை கண்டார். மாணவர்களை வேற்றுமைப் படுத்தி பார்க்கும் கிறிஸ்தவர்களின் போக்கினை உணர்ந்தார். ஆயினும் தன் கல்வியில் கவனம் செலுத்தினார்.

பின்பு உயர்நிலைக் கல்வி பயில திண்டிவனத்தில் இருந்த அமெரிக்கன் கிறிஸ்தவ பள்ளியில் 1901ல் சேர்ந்தார். சகஜானந்தர் அப்பள்ளியில் பைபிளை ஒப்பிப்பதில் கிறிஸ்தவ மாணவர்களை விட அதிக ஆற்றல் பெற்றிருந்தார். இதனால் கவரப்பட்ட பாதிரிகள் அவரை கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுமாறும் கிறிஸ்துவத்தை தழுவுமாறும் அவரை வற்புறுத்தினர். அவர் ஏற்க மறுத்துவிட்டார். அப்போதுதான் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி கொடுப்பது எதற்காக என்பது வெட்ட வெளிச்சமாகியது. கிறிஸ்தவ மதத்தில் சேர மறுத்ததால் அவருக்காக கிறிஸ்தவ பள்ளி 1903ஆம் ஆண்டில் செலவு செய்த தொகையை திருப்பிக் கேட்டது. மேலும் அவர் விடுதியில் தங்கிப் படித்த தால் அறை மற்றும் உணவு தொகையென 60 ரூபாயை அவரது தந்தையிடம் வசூலித்தனர்.

இதனால் பள்ளியில் இருந்து விலகிவிட்ட சகஜானந்தர் தன் பெற்றோருடன் வேலை தேடி கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயலுக்கு சென்றார். அங்கு அவரின் ஆன்மீகத் தேடல் அதிகமாகியது. ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டும் பல ஆன்மிக நூல்களையும் பயின்றும் பல ஞானிகளிடம் கற்றும் தன்னுடைய ஆன்மிக அறிவையும் வேட்கையையும் அதிகப்படுத்திக் கொண்டார். திருமண எண்ணத்திலிருந்து அவர் மனம் விலகியது. 1907ம் ஆண்டு தன்னுடைய 17ம் வயதில் துறவு நிலையை மேற்கொண்டார்.

சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் சென்று ஆன்மிகக் கல்வி கற்றார். இவர் பெற்றருந்த ஆன்மிக அறிவு, இறை உணர்வைக் கண்டு சிவப்பிரகாச சுவாமிகளே முனுசாமி என்ற இவரின் இயற்பெயரை சகஜானந்தம் என்று மாற்றி அழைத்தார்.
தேசப்பற்றாளர் வ.உ.சியிடம் திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். விசார சாகரம், மெய்கண்ட சாத்திரம், ஆதி ரகசியம், அஷ்ட பிரபந்தம், திருவெண்பா, கைவல்யநவநீதம் மற்றும் கம்பராமாயணம் போன்ற நூல்களை ஆழமாகப் படித்தார். சீரங்கம் சென்று பிரதிவாதி பயங்கரம் சீனிவாசாச்சாரியரிடம் சம்ஸ்கிருதம் பயின்றார். அதன் பிறகு ஞான வாசிஷ்டம், பகவத்கீதை, வால்மீகி இராமாயணம் மற்றும் பல சமஸ்கிருத நூல்களைக் கற்று தேர்ந்தார்.

1910ல் சென்னை மண்ணடியில் வாழ்ந்த ஆ.முருகேசப் பிள்ளை என்பவருடன் சிதம்பரம் வந்து சேர்ந்தார். 1916ல் அங்கு நந்தனார் மடமும் நந்தனார் கல்விக் கழகமும் தாழ்த்தப் பட்டவர்களின் கல்விக்காக ஆரம்பித்தார். மடமும் கல்விக் கழகமும் ஆரம்பிக்க பல்வேறு சமுதாய மக்கள் உதவினர். 6 சென்ட் இடமுள்ள மடம் மற்றும் 24 சென்ட் சுற்றியுள்ள நிலத்தைப் பெற வி.இராமசாமி ஐயர், இராமகிருஷ்ணப் பிள்ளை, திவான் பகதூர் கேசவப் பிள்ளை, டாக்டர் நஞ்சுண்ட ராவ், சி.ஆர்.துரைசாமி முதலியார், திவான் பகதூர் சுப்புராயலு ரெட்டியார், தாசில்தார் இராமசாமிப் பிள்ளை முதலியோர் உதவினர்.

1916ல் தாழ்த்தப் பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட நந்தனார் பாடசாலை பிரம்மஸ்ரீ என்.கோபாலசாமி ஐயங்கார் அவர்களால் திறக்கப்பட்டு முதன் முதலில் 20-5-1917ல் தண்டேஸ்வர நல்லூர் மாரிமுத்து என்பவரை ஆசிரியராக கொண்டு முதலில் 25 பிள்ளைகளோடு நடைபெற ஆரம்பித்தது.
மடாலயம், பாடசாலை, சத்திரம் முதலியவற்றின் போஷகர்களாக திவான்பகதூர் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், அட்வோகேட் ஜெனரல் எஸ்.சீனிவாச ஐயங்கார், சென்னை சுதேசமித்திரன் பத்திராபதிபர் ஏ.ரங்கசாமி ஐயங்கார், திவான்பகதூர் பி.கேசவப்பிள்ளை, டாக்டர் எம்.சி.நஞ்சுண்டராவ், சி.ஆர்.துரைசாமி முதலியார், ஐகோர்ட் வக்கீல், சிதம்பரம் பிளீடர் இராமசாமி ஐயர், சிதம்பரம் தாலுக்கா போர்ட் பிரசிடென்ட்டும் முனிசிபல் சேர்மனும் கவுன்சிலருமான கே.வராகாச்சாரியர் முதலானோர் இருந்து வந்தனர்.

பாடசாலை கட்டிமுடிக்க 1918ல் அஸ்திவாரக் கல் திவான்பகதூர் ஜஸ்டிஸ் டி.சதாசிவ ஐயர் அவர்களால் நாட்டப் பட்டது. பாடசாலைக்கு என நிதி கொடுப்பவர்கள் தன்னுடைய விலாசத்திற்கோ அல்லது சுதேச மித்திரன் பத்திராபதிபர் ரங்கசயாமி ஐயங்கார் அவர்களுக்கோ அனுப்பினால் அவர்கள் உடனே எங்களுக்கனுப்பி விட்டு பத்திரிகையிலும் பிரசுரம் செய்வார்கள் என்ற விளம்பர அறிக்கை சுவாமி சகஜானந்தரால் கொடுக்கப்பட்டது.
1919ல் ராஜாஜி சிதம்பரத்திற்கு வருகைபுரிந்தார். சுவாமி சகஜானந்தர் அவரை நேரில் சந்தித்து மடமும், நந்தனார் பள்ளியும் தொடங்கப்பட்டதன் உண்மைக் காரணத்தை விளக்கினார். நிதி நெருக்கடியையும், இடத்தின் பற்றாக்குறையையும் விளக்கினார். சுவாமிகளின் பொதுப்பணியைப் புரிந்துகொண்ட ராஜாஜி நந்தனார் மடத்தின் மேம்பாட்டிற்குரிய நிலத்தை அரசு வழங்க வேண்டுமெனத் தென்னாற்காடு மாவட்ட கலெக்டருக்குக் கடிதம் எழுதினார். இதன் மூலம் 52 ஏக்கர் புறம்போக்கு நிலம் கொடுக்கப்பட்டது.

மேலும் இலங்கை, பர்மா, இரங்கூன், மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களிடம் உரையாற்றி கழகத்திற்கென நிதியைப் பெற்றார். இந்த உழைப்பின் காரணமாக 1927ல் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. மேலும் கல்விக் கழகம் வளர வேண்டும் என்பதற்காக 1939ல் அரசே நேரடியாக நடத்த வேண்டுமென சுவாமிகள் கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு அவரின் தலைமையிலேயே தொடர்ந்து நடத்திவர அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.
பள்ளியில் கடுமையான ஒழுக்க விதிகள் கடைபிடிக்கப்பட்டன. மாணவர்கள் காலையில் நீதி போதனை வகுப்பில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். கட்டாயம் மாணவர்கள் விபூதி அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தேவாரம் முதலிய பாடல்கள் போதிக்க ப்பட்டன. பள்ளிகளில், விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் சைவ உணவையே சாப்பிட வேண்டும் என்று போதித்து வந்தார். இதனை மாணவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நந்தனார் விடுதியில் எப்போதும் சைவ உணவுதான் பரிமாறப் பட்டது.

அரசாங்கம் நந்தனார் பள்ளியையும் விடுதியையும் எடுத்துக்கொண்ட போதிலும் சுவாமிஜியின் கருத்துப்படி சைவை உணவையே வழங்கிட சம்மதித்தது. இதை எழுத்துப் பூர்வமாகவே சுவாமிஜி எழுதி வாங்கிக் கொண்டார். எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார். வ.உ.சியின் சீடராக இருந்த சுவாமி பின்னாளில் வ.உ.சி.எழுதிய நூல்களான அகமே புறம், மெய் அறம் போன்றவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளது அவரின் புலமைக்கான சான்றாகும்.

அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்ப் புலவர்களில் ஒருவராக கருதப்பட்டார். 1940ல் அண்ணாமலை பல்கலைக் கழகம் அவரை தமிழறிஞர் என்று போற்றி பாராட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் அறிஞர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. 1960ல் திருநெல்வேலியில் இருந்து கழக வெளியீடாக வெளிவந்த ‘தமிழ்ப்புலவர் வரிசை’ எனும் நூலில் இருபது தமிழ்ப் புலவர்களை அவர்களின் படைப்பாற்றல் கொண்டு வரிசைப்படுத்தி உள்ளனர். இதில் எட்டாவது இடத்தில் சகஜானந்தரின் பெயர் இடம் பெற்றுள்ளது அவரின் தமிழ்ப்புலமைக்கான சான்றாகும்.


சுவாமி சகஜானந்தர் அப்போதைய அரசியலின் தேவையைக் கருதி அரசியலில் நுழைந்தார். அன்று தமிழகத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்கென இயங்கிக் கொண்டிருந்த அனைத்திந்திய ஆதிதிராவிடர் மகாஜன சபாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த சபாவின் சார்பாக 1926 முதல் 1932வரை சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பிராக இருந்தார். பின்பு காங்கிரஸ் கட்சியில் உறுப்பிராகி 1936-37லிருந்து 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார். அரசியல் களத்தில் காந்தியடிகள், ராஜாஜி போன்றோரின் அன்பையும் பாராட்டையும் பெற்றிருந்தார். தான் காங்கிரசில் சார்ந்துள்ள போதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது தீமை காங்கிரசால் ஏற்பட்ட போது அதை கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்களே
சகஜானந்தர் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களை ‘ஆதி திராவிடர்’ எனக்கூறாமல் ‘ஆதி இந்துக்கள்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று கோரியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்து மதத்தை மேற்கொண்டவர்களெனக் கருதப் படுவதால் அவர்களும் இந்துக்களே என்று கூறி சகஜானந்தர் தேவஸ்தான கமிட்டிகளில் தாழ்த்தப் பட்டவர்களையும் நியமிக்க வேண்டும் என்று குரலெழுப்பினார்.

(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்VII, 1947, அக்டோபர் 29, பக் 61-62) திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் விஷயமாக ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டது. அப்போது சகஜானந்தர் தாழ்த்தப் பட்டவர்களுக்கு தேவஸ்தான கமிட்டிகளிலும், நிர்வாக கமிட்டியிலும் இடம் ஒதுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மேலும் சாதாரணமாக இந்து என்னும் பேதமிருப்பது போதாது. தாழ்த்தப் பட்டவர்களும் இந்துக்கள் என்றிருத்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். (ஏனென்றால் அக்காலகட்டத்தில் இந்து என்பதில் தாழ்த்தப் பட்டவர்கள் இல்லை, உயர்த்தப் பட்ட சாதியினர் மட்டுமே இந்து என்று வரையறுத்து வைத்திருந்தனர் வெள்ளையர்களும் உயர்த்தப் பட்ட சாதியினரும்).

1934ல் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார். சாதிவெறி பிடித்தவர்கள் சகஜானந்தரைத் தாக்கினர். அது பெருங்கலகத்தில் முடிந்தது. தொடர்ந்து பிரச்சாரம், போராட்டங்களின் விளைவாக 1947 ஜூன் மாதம் 2ம் நாள் சகஜானந்தர் கோயில் நுழைவு போராட்டத்தில் வெற்றி பெற்றார். நூற்றுக் கணக்கான தாழ்த்தப் பட்டவர்களுடன் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபட்டு நாங்களும் இந்துக்கள்தான், எங்களுக்கும் இந்த கோயிலில் நுழைய அனுமதி உண்டு என்பதை பறைசாற்றினார்.

1938ல் கொண்டு வரப்பட்ட மலபார் கோயில் நுழைவு மசோதாவில் கலந்து கொண்டு பேசும் போது, ”தாழ்த்தப் பட்டவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்று எந்த வேதமும் சாஸ்திரமும் சொல்லவில்லை, சில மடாதிபதிகள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். மற்ற சமூகத்தவர்களை விட தாழ்த்தப் பட்டவர்களுக்கே கோயிலுக்குள் நுழையும் உரிமை அதிகமாக இருக்கிறது. கோயிலில் சுவாமி இருக்கிறது என்றும் எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. எங்களை உள்ளே போக விடாமல் வைத்திருப்பதால் வாஸ்தவத்தில் இந்து மதத்தில் ஏன் மக்களாகப் பிறந்தோம் என்று துக்கம் அடைந்து வருகிறோம். சீக்கிரம் இதைச் சட்டமாகச் செய்து நடைமுறையில் வந்தால் அது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுக்கும்” என்று பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்களின்போது தில்லை நடராசர் தேரில் பவனி வருவது வழக்கம். அப்போது தாழ்த்தப் பட்டவர்களுக்கு அனுமதியில்லை என்னும் நிலை இருந்தது. இதைப் பார்த்த சகஜானந்தம் அதைப் போலவே ஒரு நடராசர் தரிசனத்தை தாழ்த்தப் பட்டவர்களைக் கொண்டே நடத்தினார். நந்தனார் மடம் மற்றும் கல்விக் கழக சீடர்களுடன் பெரிய இசைக்குழுவை உருவாக்கி அவர்களை தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசையுடன் பாடி மகிழ்ந்திடச் செய்தார். இது அரிதினும் அரிதான, மறக்க முடியாத, மிகவும் அனுபவித்து சுவைக்க கூடிய ஒரு நடராசர் தரிசனமாக தாழ்த்தப் பட்டவர்களுக்கு அமைந்தது. தாழ்த்தப் பட்டவர்களின் மனதில் தாங்களும் இந்துக்கள் என்பதை இவ்வாறு ஆழமாகப் பதியச் செய்தார்.

நந்தனார் மடத்தில் தமிழ் மாதம் மார்கழியில் திருப்பவை, திருவெம்பாவை மாநாட்டில் வழக்கமாக கருத்துரைகளையும் கருத்தாடல்களையும் ஏற்பாடு செய்து மக்களுக்கு அக்கருத்துக்களை பதிய வைப்பார். திருப்பவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்விய பிரபந்தம், இராமாயணம் ஆகியவற்றிலிருந்து உரையாற்றிட அறிஞர்கள் விற்பன்னர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்களை கொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார். ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயம் சார்ந்த எல்லா விழாக்களையும் மிகுந்த பிரயாசையோடும் பக்திச்சுவை செறியும் வனப்போடும் நந்தனார் மடத்தில் நடத்திக் காட்டுவார். இவை எல்லாமே தாழ்த்தப் பட்டவர்களும் இந்துக்களே என்பதை தாழ்த்தப் பட்டவர்களும் மற்றவர்களும் உணரவேண்டும் என்பதற்காகத் தான்.

அரசியல் களத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய கூட்டுத் தொகுதி, தனித் தொகுதி என்பவற்றில் தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்கள், அதனால் தாழ்த்தப் பட்டவர்கள் எதைத் தேர்ந்தேடுக்க வேண்டும் என்பதை ஒரு இந்துவின் மனநிலையில் இருந்து தேர்தெடுத்திருக்கிறார் சுவாமி சகஜானந்தர்.
சுவாமி சகஜானந்தர் கூறுகிறார்:

‘நம் மக்கள் அறிய வேண்டுவது ஒன்று உண்டு. அதுதான் கூட்டுத் தொகுதிக்கும் தனித் தொகுதிக்குமுள்ள வேற்றுமை. கூட்டுத் தொகுதி யென்பது இந்து மதத்தவர்களாகிய உயர்வகுப்பினரினின்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரினின்றும் தேர்ந்து கொள்ளப் பட்ட அபேட்சகர்களின் ஸ்தானங்களாம். தனித்தொகுதி யென்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினரினின்று மாத்திரம் தேர்ந்துக் கொள்ளப் பட்ட அபேட்சகர்களின் ஸ்தானங்களாகும். நாம் இந்து மதத்தவர்கள். ஆதலால், இந்து மக்களனைவருக்கும் பொதுவாகவுள்ள ஆலயப் பிரவேச உரிமை முதலியவைகள் எங்களுக்கும் வேண்டுமென்று வாதிட்டுப் பெற வேண்டியவர்களாயிருக்கிறோம். இதனால் நாம் கூட்டுத் தொகுதியை மேற்கொண்டாற்றான் அவற்றைக் குறித்து அவர்களிடம் வாதிட உரிமையுடையவர்களாவோம்.

இந்து மதத்தவர்களினின்றும் பிரிந்து, தனித்தொகுதியில் நின்று அவ்வுரிமைகளைப் பெற வாதிட வாயேது? ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகள் வேண்டான் என்போர் இருப்பாராயின், அவர்கள் நாங்கள் இந்துக்கள் அல்லரென்று சொல்லி, பிறமதம் புகட்டும். ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகள் தாழ்த்தப் பட்ட மக்களாகிய நமக்குக் கொடுக்கக் கூடாதென்னும் வஞ்சகமுடைய உயர் வகுப்பினரிற் சிலர் நம்மைத் தனித் தொகுதியில் நிற்கத் தூண்டுகின்றனர். இவர்களுக்கு அஞ்சி விலக வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.’
இவ்வாறு, சுவாமி சகஜானந்தர் தனக்கு சமயம் ஏற்பட்டபோதெல்லாம் தான் ஒரு இந்து, தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

சுவாமி சகஜானந்தரின் தொண்டு யாருக்காக என்பதை பற்றி அப்போது வெளியான ஒரு பத்திரிகையில் இருந்து நமக்கு வெளிப்படுகிறது.

‘…வித்யா நிலயங்கள் நிறுவி இந்திய ஏழை மக்களாகிய ஆதிதிராவிடர் பலருக்கு இந்துமத உணர்ச்சி செழிக்க அறிவுச்சுடர் கொளுத்தி வருகின்றனர். இவர் செய்யும் பணிக்கு அரசாங்கத்தோரும், அரசியல் வாதிகளும், தேசபக்தர்களும், மதத் தலைவர்களும் ஒருங்கே துணை நின்று அவரது முயற்சி கைக்கூடும்படி செய்ய முந்துதல் வேண்டும். இந்து மடாதிபதிகள் சிலர், ஏன் பலர், தங்கள் களியாடல்களிலும், சிலர் போலி வேதாந்தத்திலும் மருண்டு இந்து மதம் நாட்குநாட்டேய்ந்து பிற உயிரற்ற மதங்கள் செழித்து கொழித்து வருவதையறியாது கிணற்றுத் தவளைகள் போல வெறும் வறட்டுப் பல்லவி பாடிக் கொண்டிருப்பதுமின்றி கால நிலையறிந்து அதற்கியைந்தன செய்யும் பிறரையும் அலக்கணுறச் செய்து வருகின்றனர். இவர்கள் திருந்துங் காலமே இந்துமதம் உயிர்த்தெழுங் காலமாகும்.
இத்தருணத்து சுவாமி சகஜாநந்தா போன்றோர்க்கு உதவி செய்வது இந்து மதத்திற்கு – இந்தியற்கு – பாரத தேவிக்கு உதவி செய்வதாகும்…’
என்று ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை ஊழியன் இதழ் 20-10-1925ல் வெளியிட்டது.

இதுமட்டுமல்லாமல் கோயில் சொத்து கோயிலுக்கே என்பதில் தீவிரத்துடன் இயங்கி இருக்கிறார் சுவாமி சகஜானந்தர். அவர் கூறுகிறார் :

‘…வெள்ளைக்காரன் போகிற பரியந்தம் கோயிலில் கை வைக்கவில்லை. காங்கிரஸ் அரசு வந்து எத்தனையோ நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் கோயில் முதலியவைகளைப் பாருங்கள். எவ்வளவு பணம் செலவு செய்து அவைகளைக் கட்டி இருக்கிறார்கள். அந்த மாதிரி காரியங்களை இப்போது நாம் செய்யப் போகிறோமா? இருக்கிறவைகளை வைத்து நடத்த வேண்டும். அதுதான் நியாயம். அதனால் தாங்களும் ஏழைகளுக்குக் கொடுத்தும் சாப்பிடுகிறார்கள். இனாம் தாரி நிலங்களையும் ஜமீன் நிலங்களையும் பங்கிட்டு ஏழைகளுக்குக் கொடுக்கலாம். ஆனால் கோயில் சொத்து பொதுச் சொத்து. அதில் கையை வைப்பது அவ்வளவு நியாயம் இல்லை. உடலையும் ஓம்ப வேண்டும், உயிரையும் ஓம்ப வேண்டும். உடலுக்கு உயிரா, உயிருக்கு உடலா? அநேகருடைய சொத்துக்களைத் திருவடியில் சமர்ப்பித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் கோயில் நிலங்களைப் பொறுத்து ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும்’
(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்VII, 1947, அக்டோபர் 29, பக் 61-62) இன்று இந்து இயக்கங்கள் என்ன சொல்கின்றனவோ அதை 1947லேயே கூறி, அதற்காகப் பரிந்து பேசியிருக்கிறார் சகஜானந்தர் எனும்போது அவர் கோயில்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை உணர முடிகிறது.

திராவிடக்கழக எதிர்ப்பு
புத்தக சாலை சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஆதரித்து பேசும்போது நமது இந்து மதத்திற்கும், கலை அபிவிருத்திக்கும் முக்கியமாக இந்த பில் கொண்டுவரப் பட்டுள்ளது போற்றத் தக்கது என்று கூறினார். மேலும் புத்தகசாலை எவ்வாறு அமைக்க வேண்டும் என்றும் தன் கருத்தை கூறினார்.
”பெரிய புராணம், பாரதம், இராமாயணம், இராமகிருஷ்ணர் பரமஹம்சர் சரித்திரம், மகாத்மா காந்தியின் சரித்திரம், அவர்களுடைய உபதேச மொழிகளையும், திருக்குறள், பகவத்கீதை, ஆகம சாத்திரங்கள், திருப்பாவை, குமரேச வெண்பா, ரிக், யஜூர், சாம, அதர்வண வேத புத்தகங்களையும், பைபிள், குரான் போன்றவைகளையும் வைக்க வேண்டும்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ”மதத் துவேஷம், ஜாதித் துவேஷம் உண்டாகக்கூடிய பிரசுரங்களையும், புத்தகங்களையும் வைக்கக் கூடாது. அவைகளால் சாஸ்திரங்கள் மீது பாமர மக்கள் துவேஷம் கொண்டு ரொம்பவும் கெட்டு விட்டது. அந்த மாதிரி நூல்களை மாத்திரம் இந்த லைப்ரரிகளில் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது இந்த நாட்டிற்கு ஒருபெரிய அணுகுண்டைப் போலாகி விடும். சமூகத்துக்குத் துவேஷமுண்டாக்கக் கூடிய நூல்களை வைக்க கூடாது. அதோடு கூடக் கருப்புச் சட்டைக் காரர்களுடைய குடியரசு முதலிய பத்திரிகைகளைப் போடுகிறார்கள். அது குழந்தைகளையும் ஊரையும் கெடுத்துவிடுகிறது. அது அநியாயமாக இருக்கிறது. இதனால் நம் ஹரிஜனங்களிலும் பலர் விபூதி, திருமண் முதலியவைகள் இட்டுக் கொள்வது கிடையாது. இவர்களைப் பார்க்கும் போது என் மனம் வருந்திக் கொண்டே இருக்கிறது” என்றார். கடைசியாக ”எந்த மத சம்பந்தமாக இருந்தாலும் தெய்வ புத்தியுள்ளதாகவே இருக்க வேண்டும். துவேஷத்தை உண்டு பண்ணக்கூடிய நூல்களை வைக்க கூடாது. பொதுஜனங்களிடம் நாஸ்திகம் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ரொம்பவும் அவசியமே” என்றும் வலியுறுத்தினார்.

1948 பிப்ரவரி 21ம் தேதி பெரியாரின் இராமாயணத்தை எரித்தல், ராமனது சிலையை செருப்பால் அடித்தல் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தார். விநாயகர் சிலை உடைப்பையும் எதிர்த்தார். அதேபோல எம்.ஆர்.ராதா நடித்த கீமாயணத்தில் இராமனை இழிவு படுத்தியதையும் கண்டித்தார். காந்தியின் ”ரகுபதி ராகவ ராஜா ராம்” என்ற பாடலை இழிவுபடுத்தி பேசியதையும் கண்டித்தார். அரசாங்கத்திடம் இத்தகைய செயல்கள் இந்துக்களின் மனதை புண்படுத்துகின்றன, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறையிட்டார். ஒரு தனிப்பட்ட மனிதருக்கு அளிக்கப்படும் சுதந்திரமானது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் விதத்தில் அமைந்து விடக் கூடாது என்று சொன்னார்.

இது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் பேசும்போது கடும் எதிர்ப்பு வந்த்து. அதை அஞ்சாமல் எதிர்கொண்டார். நாமதாரியாக சட்டமன்றம் சென்ற ஒரே தாழ்த்தப்பட்ட சமுதாய சீர்திருத்தவாதி இவர் ஒருவரே.
ஈ.வெ.ரா தஞ்சை விவசாயிகள் கொடூரமாக எரிக்கப் பட்டபோது (1968-69) அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார் என்று நமக்கு தெரியும். அவர் ஒரு பிற்படுத்தப் பட்டவரின் மனநிலையிலேயே அப்படி பேசியிருக்கிறார். அதாவது கொன்றவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் இல்லையே? ஆனால் இதே பிரச்சினைக்காக 1951லேயே சுவாமி சகஜானந்தர் சட்ட மன்றத்திலேயே தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
சுவாமி சகஜானந்தர் கூறுகிறார் :

‘இன்னும் கூலி கொடுக்கும் விஷயத்தில் தஞ்சை ஜில்லாவில் பெரிய கலகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் கம்யூனிஸ்டுகள் கலகம் செய்யவில்லை. பயிரிட்டு விட்டு சாப்பாட்டிற்குக் கூலி சரியாகக் கிடைக்காத காரணத்தால் தான் விவசாயிகள் மிராசுதார்களிடத்தில் சண்டை போடுகிறார்கள். அதனால் தான் கம்யூனிஸ்டுகள் என்று அடக்குகிறார்கள்.
ஆகையால் கூலி நிர்ணயம் செய்து ஒரு சட்டம் இயற்றுவது தான் நல்லது. இன்னும் பெரும் நிலக்காரர்களிட உள்ள நிலத்தை எடுத்துப் பங்கிட்டுக் கொடுக்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். அதோடு விவசாயிகளுக்கென்று ஒரு சம்பள போர்டை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.’

(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்IX, 1951, மார்ச் 2, பக் 390)
சுவாமி சகஜானந்தரின் இந்தப் பேச்சைப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஈவெராவின் பச்சை துரோகப் பேச்சை விமர்சிக்கத் தோன்றுகிறதல்லவா?

கிறிஸ்தவ மதமாற்ற எதிர்ப்பு
சுவாமி சகஜானந்தர் தனக்கு ஏற்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற தூண்டுதல்களைக் குறித்து உணர்ந்தே இருந்தார். இந்துக்கள், முக்கியமாக தாழ்த்தப் பட்டவர்கள் மதம் மாறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். மிஷநரிகளின் மதமாற்ற செயல்களை அறிந்தே இருந்தார். ஒருமுறை சட்டமன்றத்தில் பேசும்போது,
‘சிதம்பரத்தில் இந்து ஆதிதிராவிடர்களால் நடத்தி வரும் அனாதாலயத்தில் 44 பேருக்கு போர்டிங்கு நடத்தினர். அரசாங்கத்தார் அதற்குப் பையன் ஒருவனுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் கொடுத்துள்ளார்கள். இது எந்தக் கணக்குப்படி கொடுத்தார்களென்று புலப்படவில்லை. ஆனால் மிஷனெரிகளுக்கு வாரி வாரி கொடுத்து வருகிறார்கள். மிஷனெரிகளுக்கு கொடுத்து வரும் பணம் தாழ்த்தப் பட்டவர்களைக் கிறிஸ்தவராக்குவதற்குப் பயன்படுகிறது. …..கிறிஸ்தவ போர்டிங்கில் ஆதிதிராவிடப் பிள்ளைகள் சேர்வதால் முதலில் மாணவன் சேருகிறான். பிறகு அவன் தாய் தந்தையர் அவன் மூலம் சேருகிறார்கள். அப்படியே தொடர்புள்ள பலர் சேருகிறார்கள். அதனால் ஆதிதிராவிடச் சமூகத்திற்குப் பெரிய நஷ்டம் உண்டாகிறது.
தாழ்த்தப் பட்டவர்களின் பேரால் மிஷனெரிகளுக்குப் பணங்கொடுக்க கூடாது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கென்றே கொடுக்கட்டும். அது எங்களுக்குச் சம்மதம்.

இந்த மாகாணத்தில் சுமார் ஏழாயிரம் பேர்களுக்கு அரசாங்கத்தார் போர்டிங் கிராண்டு கொடுத்து வருகிறார்கள். அதற்காக இரண்டு லட்சங்கள் செலவழிகின்றன. அவற்றில் பெரும்பாலும் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்குப் போகிறது. தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பயன்படுவதில்லை. ஆனால் ஏற்கனவே கொடுத்து வரும் பணத்தை நிறுத்தும்படி யான் சொல்லவில்லை. நமது மாண்புமிக்க மந்திரியவர்கள் இந்த வருஷம் ஐம்பதினாயிர ரூபாய்கள் அதிகப் படுத்தியுள்ளார்கள். அதிகப் படுத்தியுள்ள அந்த ஐம்பதினாயிரத்தைத் தாழ்த்தப் பட்ட இந்து ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிவைத்துவிட வேண்டுகிறேன். மிஷனெரிக்கு மிஷன் மூலமாய் உதவியுண்டு.’
என்று கூறினார் (1933 மார்ச் மாதம் 21ம் தேதி பேசியது. எண் LXVI, பக் 539-543).
1948 மார்ச் 1ம் தேதி பேசும்போது

‘சேரிகளில் பள்ளிக்கூடங்கள் வைத்தால் அதற்கு கிறிஸ்துவ ஆசிரியர்கள் நியமிக்கிறார்கள். அப்படி நியமிப்பதால் அவர்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி விடுகிறார்கள். அது கூடாது. இன்னும் அங்கே சுயமரியாதைக் காரர்கள் வந்து பள்ளிக்கூடத்தை நாசமாக்கி விடுகிறார்கள். ஆகையால் ஆசிரியர்களை நியமிக்கும்போது யோக்கியமுள்ளவர்களாகப் போடவேண்டும். இவைகளை தடுக்க இந்து ஹரிஜன ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும்.’ என்று கூறினார்.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டது என்ற பொய்ப்பிம்பத்தையும் உடைத்திருக்கிறார் சுவாமி சகஜானந்தர்.

‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பாடுபட்டார் ஜஸ்டிஸ் கட்சியார். அப்போது நாம் அவர்களோடு ஒத்துழைத்திருக்கிறோம். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலிருந்த போது அவ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கையாண்டதில்லை என்பது கவனிக்கத் தக்கது.’
என்று கூறுகிறார்.

சுவாமி சகஜானந்தர் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இந்து சமயத்திற்கும் அயராது பாடுபட்டிருக்கிறார். தாழ்த்தப் பட்டவர்களுக்கும், இந்து சமயத்திற்கும் எதிராக யார் இயங்கினாலும் அதை எதிர்த்து செயல்பட்டு இருக்கிறார்.
சுவாமி சகஜானந்தர் ஒரு உண்மையான இந்து, மாபெரும் இந்து சமுதாயச் சிற்பி, ஆன்மீக அருளாளர், தன்னலம் கருதாமல் உழைத்த சமுதாயத் தலைவர் என்பதை நினைவில் கொண்டு அவரைப் போற்றுவோமாக.


(நன்றி: மின் தமிழ் ) பன்முக ஆளுமை கொண்ட சுவாமி சகஜானந்தர் குறித்து நண்பர் ம.வெங்கடேசன் எழுதியுள்ள ஒரு விரிவான கட்டுரை -  http://www.tamilhindu.com/2012/11/voice-of-an-oppressed-hindu-sahajanandar/

தமிழர்கள் வரலாறு

மிழர்கள் வரலாறு உருவாவதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் இக்கருத்தைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி என்ற வழக்கு வலியுறுத்துகின்றது. இவ்வழக்கை வெறும் மேம்போக்காகக் கூறுவதை விடுத்து ஆய்வுக் கண்கொண்டு நோக்கின், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பேயான தொல்லுலகில் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது மாத்திரமின்றி, அத்தொன்மைக் காலத்திலேயே இக்குடி மூத்து முதிச்சு நிலையினையும் அடைந்திருந்தது என்பதும், எல்லாத் துறைகளிலும் கலை கண்டிருந்தது என்பதுமான மாபெரும் உண்மை புலனாகும்.தொடக்கக் காலத்தில் முதிர்ச்சியுள்ள வளர்ச்சி நிலையை எட்டியிருந்த தமிழர், தம் மொழியை இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூவகைப்படுத்தி வளர்த்து வந்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் பற்றியும், தமிழரின் வாழ்க்கை நிலை பற்றியும் அறிந்து கொள்வதற்குத் தமிழிலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன.


தமிழர்கள் முத்தமிழோடு கலை மற்றும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கிய சிறப்பையும் இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன. எனவே இலக்கியங்களே தமிழர்தம் கலை மற்றும் கலாச்சாரம் பற்றி அறிய உதவும் முதற்சாதனங்களாக அமைகின்றன. ஆகவே இலக்கியம் குறிப்புகளின் அடிப்படையில் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் மற்றும் நுண்கலைகள் என்னும் ஐந்தமிழுள் இசைத்தமிழ் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து, ஆய்ந்து அரிய உண்மைகளை வெளிப்படுத்தும் அரியதோர் முயற்சியாகவே இக்கட்டுரை அமைகிறது.முதற்கண் இயல் தமிழ் என்பது எது? இது பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகள் யாது என்பது பற்றி ஆராயப்படுகிறது.


இயற்றமிழ் ஒரு விளக்கம்அனைத்துத் துறையிலும் இயலுகின்றதும், இயக்க வைப்பதுமாகிய இயற்றமிழ் என்பது தமிழர் யாவர் மட்டும் பொதுமையின் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும், செய்யுளுமாகிய நூல்களில் தொகுதியாம் என்பர் திரு.ந.சி. கந்தையா பிள்ளைபடித்த மாத்திரத்தில் ஒன்பான் சுவை தரத்தக்கதாக அமைந்துள்ள இயற்றமிழினுள்ளே எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து வகை இலக்கணமுமே அடங்கும், இன்னும் தெளிவாகக்க கூறப்கின் வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் எனப்படும் என்பர் பேராசிரியர். எனவே இயற்றமிழில் இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரைகள், உரைநடை, புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும் என்பது தெளிவு. முத்தமிழில் முன்னர் தோன்றியமையாலும், இயலின்றி ஏனை இசை மற்றும் நாடகத் தமிழ் இயங்கவியலாமையாலும் இவ்வியற்றமிழ் முத்தமிழ் முதன்மைபடுத்தி மொழியப்படுகின்றது.இயற்றமிழன் பின் வைத்து எண்ணப்படுகின்ற இசைத் தமிழ் பற்றியும் இசைத்தமிழ் எவ்வாறு கூத்து என்னும் நாடகத் தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகிறது என்பது பற்றியும் அடுத்து ஆராயப்படுகின்றது.இசைத்தமிழ் விளக்கம்: இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது. தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கணத்தோடு இசைத் தமிழிலக்கணமும் இழையோடிக் கிடக்கின்றது. இவ்விரு தமிழும் வெவ்வேறாகப் பிரித்தறிய முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.


இசை பொருள்: இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது எனும் பொருளைத் தருகிறது என்பர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்றள பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்பர் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள்.ஒலி, ஓசை, இசை:- இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பதும் ஒரு தத்துவம், மூலாதாரமான ஒலி வேறு ஓசை வேறு ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என இறையைப் பற்றிக் கூறும் அப்பரின் தேவார வரிகளிலருந்து ஓசை வேறாகவும், ஒலி வேறாகவும் கருதப்படுவதை உணர முடிகிறது. ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையை ஏழிசையாக அமைகிறது என்று சுட்டுகின்றது. எனவே ஓசையே இசைக்கு அடிப்படை என்பதை உணர முடிகிறது.


ஒலி என்பது ஒரு குறிப்பைக் கருதி எழுந்து, இனிதாய் அமைந்து சுவைப் பயப்பதாக இருக்க வேண்டும். காலக் கடப்பால் ஏற்பட்டுள்ள சொல் பயன்பாட்டை நோக்கும்போது இசையும் ஒலியும் சில இடங்களில் வேறுபாடு கருதாது பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.ஓசை மற்றும், இனிதாய் அமைந்து சுவை பயப்பதாக இருப்பதான ஒலியின் அடிப்படையில தோன்றுவதான இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். இயல் தமிழைக் கற்றும், கேட்டும் அனுபவிக்கவும் சுவைக்கவும்க முடியும். ஆனால் இசையையோ செவிப்புலன் ஒன்றினால் மாத்திரமே சுவைக்க முடியும்.இசையும் இறையும்: இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.துறைவாய் நுழைந்தனையோவற்றி யேழிகசைச்
சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந்த
தெய்தியோ - எனும் திருக்கோவையார் பாடல் ஏழிசைச் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பதைத் தெரிவிக்கின்றது. ஏழிசையாய் இசைப்பயனாய் என்று சுந்தரரும் எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று அப்பரும் கூறியுள்ளமையும் நோக்கத் தக்கது.ஆதி மனிதனும் இசையும்: மொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம் புரியாத மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்று. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்ச கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆரவாரமே தாளமாயிற்று. சிலை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போது எழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்திற்கு மூலமாயிற்று.இசையின் பழமைதொல்காப்பியம்: மனிதனின் உணர்ச்சிப் பெருக்கோடு ஒன்றி வளர்ந்த இசை பற்றி நமக்கு உணர்த்தும் முதல் நூலாக தமிழின் கருத்துக் கருவூலமான தொல்காப்பியத்தையே கொள்ளலாம்.அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிய இசையோடு சிவனிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்எனும் தொல்காப்பியம் அடிகள் இசையில் பழமையை உணர்த்தும் தொல்காப்பியச் சொற்களின் ஓசையதிக்கு வண்ணம் என்று பெயரிட்டு," வண்ணந்தாமே நாலைந்தென்ப "என்று கூறுவதன் மூலம் அதனை இருபது வகைப்படுத்திக் கூறியுள்ளார். வண்ணங்கள் என்றால் சந்த வேறுபாடுகள்- என்பர் பேராசிரியர் இவ்விருபது வண்ணங்களையும் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கண்ணி முதலிய பாடல்களில் தெளிவாகக் காணலாம்.எதுகை, மோனை, இயைபு, முதலிய தொடைகளின் இலக்கணம் இசைக் கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை, விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுபவனவாம்.


 எதுகை, மோனை போன்ற தொடைகளில்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடலுக்குரிய யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் அழகாகவும் தெளிவாகவும் வகுத்தும் பகுத்தும் காட்டியுள்ளார்.செய்யுட்களின் சிறப்பிற்கு எதுகை, மோனை, முதலிய தொடை விகற்பங்கள் பெரிதும் துணைபுரிந்தமையினின்று இயற்றமிழும் இசையமைதி பெற்றிருப்பது புலனாகும். வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே பண்டு தொட்டு ஓதப்படுகின்றன. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு முதலியவற்றை இசைப்பாக்கள் என்றே பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவராயினர். வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசை துறை முதலியனவும் இசைப் பாக்களேயாதல் வேண்டும். தொல்காப்பியரே முதன்முதலில் எதுகை, மோனை ஆகியவற்றைப் பிரித்துக் கூறும் யாப்பிலக்கணத்தை அறிமுகப்படுத்தியவராவார். தொல்காப்பியர் கூறும் பண்வரிசை முறை தமிழக இசை முறைகளில் வழி வழியாகப் பண்களை வரிசையில் நிற்கச் செய்யும் முறைகட்கெல்லாம் முன்னோடி எனலாம்.தொல்காப்பியத்தின் வழியாக அறியப்படும் இசைச் செய்திகள்1. நால்வகை நிலங்கட்குரிய பண்வகைகள்
2. பண்களுக்குரிய பெரும்பொழுது சிறுபொழுதும்,
3. பண்களை வரிசைப்படுத்தி நிறுத்தியது.
4. பாடலின் அமைப்பிற்கும் சிறப்பிற்கும் தேவையான எதுகைமோனை முதலிய தொடை வகைகள்
5. அம்போதரங்க அமைப்பு
6. இசை எழுத்துக்களின் மாத்திரை அளவும்
7. தாள நடை வகைகள்.இசைத் தமிழ் நூல்கள்:- இசைத் தமிழ் விரிவானது. ஆழமானது. பல துறைகள் கொண்டது, இவ்விசைத் தமிழ் நூல்கள் சங்க காலத்திலேயே எண்ணற்றவை இருந்தன என்பதை இறையனார் களவியலுரை ஆசிரியரின் கூற்று வலியுறுத்தும், முதற் சங்க வரலாறு பற்றிக் கூறும் இவர், அவர்களால் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன, என்றும் கடைச்சங்கம் பற்றிக் கூறுமிடத்து அவர்களாற் பாடப்பட்டன. நெடுந்தொகை நானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென இத்தொடக்கத்தன என்றும் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இசைத் தமிழில் பல தலைசிறந்த நூல்கள் முதற் சங்க காலத்திலேயே இருந்தன என்பதும், கடைச் சங்க காலத்து எழுந்த எட்டுத்தொகை நூல்களும் இசைத்தமிழ் தொடர்புடையன என்பதும் விளங்குகின்றது.


 பெருநாரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுரைக் கோவை போன்ற எண்ணற்ற இசைத் தமிழ் நூல்களும் வழக்கில் இருந்து, பின்னரே வழக்கு ஒழிந்ததோ, கடல்கோட்பட்டோ மறைந்திருத்தல் வேண்டும்.பரிபாடல்: இன்று நமக்கு கிடைத்திருக்கும் இசை பற்றிய குறிப்புகளில் பழமையான இலக்கியமாகத் திகழ்வது பரிபாடல். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான இது கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும். 70 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கழிந்தன போக இன்று எஞ்சியுள்ளவை 22 ஆகும். இவற்றுள் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசை அமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, தூக்கு வண்ணம் முதலியவும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பரிபாடலில் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் பாலையாழ், நோதிரம், காந்தாரம் எனப் பண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இசை வகுத்தோராகப் பதின்மர் பெயர்களும் அதில் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப்பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.


எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப் பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக் கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. திருமுருகாற்றுப்படை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, ஆடலாகிய கூத்து, கண்டமாகிய இசை மரபிற்கான பஞ்ச மரபினைப் பெற்று தமிழிசையின் சிறப்பை விளக்கவல்ல ஆற்றுப்படை நூலாகத் திகழக் காணலாம்.சிலப்பதிகாரம்: சங்க இலக்கியத்தை அடுத்த சிலப்பதிகாரத்தில் இசை பற்றி செய்திகள் மிகவும் பரந்து காணப்படுகின்றன. சிலம்பின் கதைப்பகுதிகளுடன் இசை இலக்கணம் பின்னிப் பிணைந்து இயற்றப்பட்டுள்ளன என்றே கூறலாம். தமிழிசை இலக்கணம் கூறும் பெருங்கடலில் சிலம்பு ஓர் ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம். இது நல்கும் ஒளியின் உதவியால் இதற்குக் காலத்தால் முந்திய தொல்காப்பியம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டியுள்ள ஏராளமான இசைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம்.சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத் தந்தை என்றும் கூறலாம். இளங்கோவின் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வழிவழி வந்த இசை இலக்கண மரபு சிலம்பில் காணப்படுகின்றமையின் தொல்காப்பிய இசைக் குறிப்புகளை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.


தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்கணமே - தமிழிசை இலக்கணம் சிலம்புதொட்டு இன்று வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து வருகிறது என்பர் டாக்டர் எஸ். இராமநாதன்.தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதியாகும்.உதயணன் கதையினைக் கூறும் பெருங்கதையிலும் யானையின் சீற்றத்தை சீவ சிந்தாமணியல் காந்தருவதத்தை யார் இலம்பகத்தில் இடைக்காலத் தமிழிசையினைப் பரக்கக் காண முடிகின்றது.இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கட்கும் வெவ்வேறான யாழ், அல்லது பண் கூறப்படுவதினின்றும், அக்காலத்தில் இசைக்கலை பெற்றிருந்த சிறப்பும், ஐவகை நிலமக்களும் பெற்றிருந்த இசையுணர்ச்சியும் பெறப்படுகின்றது.இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று என்னும் பரிமேலழகர் கூற்றிலிருந்து, தமிழ்ப் பண்கள் நூற்று மூன்று என்பது கொள்ளப்படுகின்றது. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும்.


 நரம்பு என்பது இங்கு ஸரி கம பத நீ என்றும் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும். இந்த ஏழு ஸ்வரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும்.இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும், இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி, ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.பண்வகை: பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்பர் - ந.சி. கந்தையாபிள்ளை. ஆனால் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் பெரும்பண்களாவன குறிஞ்சி, முல்லை, மருதம், செவ்வழி, என்பனவாம் என்பர். இப்பண்கள் வடமொழியில் ராகம், என்று கூறப்படுகின்றன. இதனை மேளகர்த்தா, ராகம் அல்லது ஐனகராகம் என்றும் கூறுவர். பண்ணிலிருந்து திறங்கள் பிறக்கும்நிரை நரம்பிற்றே திறமெனப்படுமே என்ற திவாகரச் சூத்திரம் பண்கள், திறங்களின் இலக்கணத்தை விளக்கும் திறங்களே தற்போது ஜன்யராகம் என்று வழங்கப்படுகின்றன.

(நன்றி: tamil reader)

புதன், 28 நவம்பர், 2012

நடிப்பும் - இசையும்

"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு
ஆடலும் பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை-
பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில்கையும்,
கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை
கூடை செய்த கை வாரத்துக் களைதலும்
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னோடும்"
—(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை -12 -25 வரிகள்)

தெருக்கூத்து

(நன்றி விக்கி பீடியா)



தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். இது தமிழர்களின் பழங்க்கலைகளில் ஒன்று ஆகும். கதை சொல்லல், நாடகம் ஆடல், பாடல்  என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம்  நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம் பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி  இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.

கூத்து நடைபெறும் இடம்

தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும். ஊரின் புறத்தே அல்லது கோவில் திடல்களில், அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவே இக்கூத்தானது நடைபெறும். கூத்து நடைபெறும் இடத்தை முதலில் சுத்தப்படுத்துவர். பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில் விளக்குகளைக் கட்டுவர். கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்து நடைபெறும் இடமாகும். இதனை விட்டமாகக் கொண்டே மக்கள் வட்டமாகச் சுற்றி அமர்வார்கள். கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒரு அகன்ற விசுப்பலகை (bench)போடப்பட்டிருக்கும். அதன் பின்னே தென்னங் கிடுகுகளால் அறை அமைக்கப்பட்டிருக்கும். இது கூத்தில் நடிக்கும் நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.

பின்பாட்டுக் காரர்கள்

கூத்திற்கு மிக இன்றியமையாத ஒன்று பின்பாட்டு ஆகும் . ஆடலும் பாடலும் இணைந்த நாட்டிய நாடக்மே தெருக்கூத்து. இக்கூத்தில் பின்பாட்டு பாடுபவர்கள் இவர்களே ஆவார்கள். ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மைக்கேற்ப இவர்கள் பாடுவர். பாட்டின் இடையே வசனம் பேசுவதும் இவர்களே. இவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமை மிகுந்தோராய் இருப்பர். இவர் விசுப்பலகையில் அமர்ந்து இசைக்கருவிகளை இசைப்பர்.

இசைக்கருவிகள்

தெருக்கூத்தில் ஆர்மோனியம், தாளம், மத்தளம், முகவீணை மோர்சிங்) முதலிய கருவிகள் பின்னனி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.

கட்டியங்காரன்

கட்டியங்காரன் என்பவரே கூத்தின் முக்கிய நபராவார். கூத்தினைத் தொடங்கி வைத்தல், கூத்தின் கதா பாத்திரங்களை அறிமுகம் செய்தல், கூத்தின் இடையே சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தல், கூத்தின் கதையை விளக்குவதோடு இடையிடையே மக்களை மகிழ்விக்கும் விதமாக கோமாளி போல நகைச்சுவையைக் கையாளுதல், கூத்தினை முடித்து வைத்தல் ஆகிய பணிகளையும் இவர் செய்வார்.

ஆடை அணிகலண்கள்

கட்டியங்காரனுடைய உடை முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள் கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும். மற்றவர் கதைக்கு ஏற்பவும், பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும், உடலோடு ஒட்டிய முழுக் கால் சட்டை, அதன் மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும் அணிவர். பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம், மார்புப் பதக்கம், தோளணிகள்(புஜகீர்த்திகள்), போன்ற அணிகளை அணிவர். வண்ணக் காகிதங்கள், பாசிமணிகள், கண்ணாடித் துண்டுகள் போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப் பட்டிருக்கும். பெண் வேடதாரிகள் சேலையும் ரவிக்கையும் அணிந்து குறைவான அணிகலன்களை அணிவர்.

விதிமுறைகள்

  • கூத்து தொடங்கும் முன் இசைக் கருவிகள் அனைத்தும் ஒருசேர ஒலிக்கும். இதனை களரி கட்டுதல் என்பர். அதாவது கூத்து தொடங்கிவிட்டது என ஊருக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி இது.
  • கூத்தாடுகளத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத் திரையாகப் பிடித்தபடி நிற்பர். கூத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக மேடையில் தோன்றுவதற்கு முன்னர், இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன் காட்சி தருவர்.
  • தெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லை. ஆண்களே பெண்வேடமிட்டு நடிப்பர்.
  • பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்துகளில், கூத்து தொடங்கி முடியும் வரை கூத்தில் நடிப்பவர்கள் நோண்பிருப்பர்.
  •  

இன்றைய நிலை

தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி கோவில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப் பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது. தற்காலத்தில் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும் இக்கூத்துக் கலை இன்றைய காலகட்டத்தில் அருகி வருகிறது.

பழைய நாடக வகைகள்

நாடகமும் கூத்தும்

 உலக நாடகங்களை ஆராய்ச்சி செய்தவர்கள் இருபெரும் பிரிவுகளில் நாடகங்களை அடக்கிக் காட்டுவர். அவை,
1. இன்பியல் நாடகங்கள்
2. துன்பியல் நாடகங்கள்
     
         மகிழ்ச்சியான நிலையில் நாடகம் முடிவுற்றால் இன்பியல் நாடகம் என்றும் துயர முடிவைக் கொண்டிருந்தால் துன்பியல் நாடகம் என்றும் நாடகங்களைப் பிரித்துக் காட்டினர்.

தமிழ் நாடகங்களிலும் பிற இந்திய மொழி நாடகங்களிலும் துன்பியல் முடிவு என்பது விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று அன்று. இந்திய நாடகங்கள் பெரும்பாலும் இன்பியல் முடிவைக் கொண்டவையாகவே இருக்கும். இருபதாம் நூற்றாண்டில் மேனாட்டு நாடகச் செல்வாக்கு இந்தியாவில் ஏற்பட்ட பின்னர்தான் துன்பியல் முடிவுகள் நாடகங்களில் பரவின. 

பழைய நாடக வகைகள்

பழைய தமிழ் நாடகங்களும் இருபதாம் நூற்றாண்டு நாடகங்களும் வேறு வகையான பிரிவுகளைக் கொண்டிருந்தன. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் பழந்தமிழ் உரையாசிரியர்கள் பின்வருமாறு வகைப்படுத்தினர். அவை,

1. வேத்தியல்
2. பொதுவியல்

அரசர்களும் அரசர்களை ஒத்த பெரியவர்களும் காணும் நாடக வகை வேத்தியல். பொதுமக்கள் காண்பதற்குரிய நாடக வகை பொதுவியல்.

இந்த நாடகம் அல்லது கூத்து வகைகளை இன்னும் நுட்பமாகச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பகுத்துக் காட்டுகிறார்.

வசைக் கூத்து - புகழ்க் கூத்து
வரிக் கூத்து - வரிசாந்திக் கூத்து
சாந்திக் கூத்து - விநோதக் கூத்து
ஆரியக் கூத்து - தமிழ்க் கூத்து
இயல்புக் கூத்து - தேசிக்கூத்து
என்பன அடியார்க்கு நல்லார் வகைப்படுத்தும் பத்துக் கூத்து வகைகள்.
இருபதாம் நூற்றாண்டு நாடக வகைகள்

 
மேடை நாடகமே தம் வாழ்வின் பெரும்பணி என்று செயல்பட்டவர் அவ்வை தி.க. சண்முகம். அவர், மேடை நாடகங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் எனக் கூறுகிறார்.
 
“தமிழ் நாடகங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். புராண நாடகம், பக்தி இலக்கிய நாடகம், வரலாற்று நாடகம், கற்பனை நாடகம், பக்தி இலக்கிய நாடகம், சமுதாய நாடகம், சமுதாயச் சீர்திருத்த நாடகம், தேசிய நாடகம், நகைச்சுவை நாடகம் என நாடகங்களை இவ்வாறு பலவகைப்படுத்திப் பார்க்க வேண்டும். இந்த நாடகங்களோடு பிரச்சார நாடகம் என்னும் ஒரு பிரிவையும் சேர்த்துக் கொள்ளலாம்” என்று கூறுகிறார்.

1. புராண நாடகம்
சிவலீலா, கிருஷ்ணலீலா, சக்திலீலா, மகாபாரதம் போன்றவை புராண இதிகாச நாடகங்கள்.
2. வரலாற்று நாடகம்
இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தஞ்சை நாயக்கர் தாழ்வு, இமயத்தில் நாம் போன்றவை வரலாற்று நாடகங்கள்.
3. கற்பனை நாடகம்
இரண்டு நண்பர்கள், லீலாவதி, சுலோசனா, வேதாள உலகம் போன்றவை கற்பனை நாடகங்கள்.
4. பக்தி நாடகம்
நந்தனார், சிறுத்தொண்டர், பிரகலாதன், மார்க்கண்டேயர் போன்றவை பக்தி நாடகங்கள்.
5. சமுதாய நாடகம்
உயிரோவியம், வேலைக்காரி, நாலுவேலி நிலம், டம்பாச்சாரி விலாசம் போன்றவை சமுதாய நாடகங்கள்.
6. சீர்திருத்த நாடகம்
அந்தமான் கைதி, இரத்தக் கண்ணீர், இழந்த காதல், வாழ்வில் இன்பம் போன்றவை சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள்.
7. நகைச்சுவை நாடகம்
சபாபதி, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், துப்பறியும் சாம்பு, ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது போன்றவை நகைச்சுவை நாடகங்கள்.
8. பிரச்சார நாடகம்
பதிபக்தி, ஐம்பதும் அறுபதும், விலங்கு மனிதன், காகிதப் பூ போன்றவை பிரசார நாடகங்கள்.
இலக்கிய நாடக வகைகள்

மேடையில் நடிக்கப்பெறும் நாடகங்களை வகைப்படுத்துவதைப் போல் இலக்கியமாக எழுதப்பெறும் நாடகங்களை இருவகையில் பிரிக்கலாம். அவை,
1) உரைநடை நாடகங்கள்
2) செய்யுள் நாடகங்கள்

இந்த இருவகை நாடகங்களும் நடிப்பதற்கும் படிப்பதற்குமாக எழுதப்படும் நாடகங்களாகும்.

காட்சி அமைப்பையும் காண்போரையும் மனத்துள் கொள்ளாமல் மொழிநடைக்கும் கருத்துக்கும் மட்டுமே முன்னுரிமை தந்து எழுதப் பெறும் நாடகங்களை அரங்கேற்ற முடியாது. இவற்றைப் படித்து மட்டுமே இன்புறலாம்.

மொழிநடைக்கும் முதன்மை தந்து, காட்சி அமைப்பையும் முன்னிறுத்தி எழுதப்படும் நாடகங்களைக் கண்டு மகிழ்வதுடன் கற்றும் மகிழலாம்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

அழிந்து வரும் கலைகள்


அழிந்து வரும் கலைகள் பற்றி அவ்வபோது வாய் பேச்சோடு முடித்துவிட்டு போய்விடுகிற நாம் அதன் வளர்ச்சியை பற்றி மீண்டும் துளிர் விட செய்ய என்ன செய்கிறோம் எனும் கேள்வி நம் தலையை குடைந்துகொண்டிருக்கிறது. ஏதோ நம் தாய் கலைகள் எனும் ஏக்க பெருமூச்சு ஒன்றை மட்டுமே காற்றில் கலந்து விட்டு போகிற நம்மால் ஏன் நம் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க முடியாது. நம்மால் முடியும் நிச்சயமாக. நாம் அதையும் ஒருநாள் பார்க்கத்தான் போகிறோம். அதற்க்கு முன்பு நாம் கவனிக்க வேண்டிய சில கலைகளை இங்கு பார்ப்போம்.



வில்லுப்பாட்டு


இக்கலை பத்து நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்தது. தமிழகத்தின்
தென்மாவட்டங்களான குமரி,நெல்லை மாவட்டங்களில் ' வில்லிசை ' அல்லது ' வில்லுப்பாட்டு ' மிகப் புகழ்பெற்ற கலையாக உள்ளது. சிற்றூர்களில் உள்ள தெய்வங்களுக்கு வழிபாடு நடத்திக்' கொடை விழா ' எடுக்கும்போது தெய்வங்களின் வரலாறுகள், தெய்வநிலை பெற்ற வீரர்களின் வரலாறுகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல இக்கலை பெரிதும் பயன்படுகிறது.

வில்லை முதன்மைக் கருவியாகவும், உடுக்கு, குடம், தாளம், கட்டை ஆகியவற்றைத் துணைக்கருவிகளாகவும் கொண்டு இக்கலை நடத்தப்படுகிறது. இந்த இசைக்குழுவின் முதல்வராக அமர்ந்து கதைபாடுபவர் ' புலவர் ' எனப்படுவார். அவர் கதை சொல்வதிலும், பாட்டுப் பாடுவதிலும், நடிப்பதிலும், காலத்திற்குத் தக்க அரசியல், பொருளாதார, சமூக அடிப்படையிலான் நகைச்சுவைத்துணுக்குகள் சொல்வதிலும் வல்லவராக இருப்பார். மரபு வழியிலமைந்த தென்மாவட்ட வில்லுப்பாட்டுகளில் புகழ் பெற்றது ' ஐயன் கதை ' எனப்படும் ' சாஸ்தா கதை ' யாகும். இதிகாசம், புராணம் தொடர்பான கதைகள், சமூகப் பாங்கான கதைகள் எனப் பல கதைகள் இன்றும் குமரிமாவட்ட சிறுகோயில்களில் வில்லிசை நடைபெறுவதைக் காணலாம்.
 
 
 




கணியான் கூத்து


குமரி, நெல்லை மாவட்டங்களில் சிறந்து விளங்கும் மற்றொரு கலை இந்தக் கணியான் கூத்து. இதற்கு ' மகுடாட்டம் ' என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுடலைமாடன் பாட்டு முதன்மையாகவும் அம்மன் பாட்டு அடுத்த நிலையிலும் இதில் இடம்பெறுகின்றன. இக்கூத்தில் தலைமைப் பாடகர், உதவிப் பாடகர், மகுடக்காரர் மூவர், பெண் வேடக்காரர் இருவர் என ஏழு பேர் பங்கேற்பர். இதில்
மகுடம், சலங்கை போன்ற இசைக்கருவிகள் இடம் பெறும்.

மகுடம் பெரிதும் வாசிக்கப்படுவதால் இதற்கு மகுடாட்டம் என்ற பெயர் வந்தது. பூவரசு, வேப்பமரக் கட்டைகளைக் கொண்டு செய்யப்படும் இந்த மகுடத்தில் எருமைத்தோல் போர்த்தப்படுகிறது. தலைமைப்பாடகர், பின்பாட்டுக்காரர், மகுடக்காரர்கள் ஓர் அரைவட்டமாகவும், பெண் வேடதாரிகள் ஓர் அரைவட்டமாகவும் அமைந்து ஒரு முழுவட்டம் கூத்தில் உருவாகிறது. இதனை நாடகம் சார்ந்த கூத்து எனவும் கூறுவர்.
 


பிற கூத்துகள்



நெல்லை மாவட்டத்தில் கரகாட்டம், ஆலி ஆட்டம், ஒயிலாட்டம், களியாட்டம், பெருமாள் ஆட்டம், நால்வர் ஆட்டம், மாடு ஆட்டம், குறவன்-குறத்தி ஆட்டம், காளி ஆட்டம், தோற்பாவைக் கூத்து போன்ற பல கலைகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் ஆலி ஆட்டம், பெருமாள் ஆட்டம், தோற்பாவைக் கூத்து ஆகியன மெல்ல அழிந்துவருகின்றன.

அரசு இவற்றை உடனடியாகக் கவனித்து நிதியுதவி செய்து வாழவைக்க வேண்டும். இவற்றில் நாதஸ்வரம், உறுமி, பம்பை, தவில், சுருதிப்பெட்டி, வில், கோல், கிளாரினெட் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் கரகம், வட்டத்தப்பு, குறவன்-குறத்தி, ராஜா ராணி, நால்வர் ஆட்டம், மாடு ஆட்டம், பபூன், காவடிஆட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் முத்லியன நடத்தப்படுகின்றன. இவற்றுள் கரகம், காவடிஆட்டம், தோற்பாவைக் கூத்து ஆகியன அழியத்தக்க நிலையிலுள்ளன.


தெருக்கூத்து

தமிழகத்தில், எல்லாக் கிராமங்களிலும் தெருக்கூத்து இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோடைப்பருவத்தில் கோவில் விழாக்களில் தெருக்கூத்து நடைபெறுவதை இன்றியமையாத ஒன்றாக மக்கள் கருதுகின்றனர். இரவு நேரங்களில் கோயிலருகே அமைந்திருக்கும் பெரியவெளி அல்லது நாற்சந்திகளில் கூத்து நடத்தப்படும். தெருக்கூத்தில் ஆடுவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டு தலை, தோள், மார்பு, கைகள் ஆகியவற்றில் மரக்கட்டையால் ஆன அணிகலங்களை அணிந்து கொள்வர். கூத்தைச் சொல்லிக்கொடுக்கும்' வாத்தியார் ' நடனமுறைகள், ராகதாள வகைகளையும் சொல்லிக்கொடுப்பார்.

தெருக்கூத்தில் மிக முக்கியமான ஒருவர் ' கட்டியங்காரன் ' ஆவார். இவருக்கு ' பபூன், விதூஷகன், சூத்திரகாரி 'போன்ற வேறு பெயர்களும் உண்டு. திரைக்குப்பின்னால் இருந்து தன்னைப் பற்றிப் பாடிய பின், திரை விலக்கப்பட்டு,அன்றைய தெருக்கூத்துக் கதையைச் சொல்லுவது, சிறிய பாத்திரங்களைத் தானே ஏற்பது, கூத்தை முடித்து வைப்பது போன்ற பணிகளை இவர் செய்வார்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் வெண்பா, விருத்தம், அகவல் போன்ற பாக்களையும்
நாட்டுப்புறச் சிந்து வகைகளையும் பாடவல்லவர்களாய் இருப்பார்கள். இசைக்குழுவில் மிருதங்கம், சுருதிப்பெட்டி, தாளம், முகவீணை போன்ற இசைக்கருவிகள் இருக்கும். தெருக்கூத்து மற்ற நாட்டுப்புறக் கலைகள் போல் பொழுதுபோக்குக்காக ஆடப்படாமல், பக்தியைப் பரப்புவதற்காக ஆடப்படுகின்ற தெய்வீகக் கலையாகும். தமிழகத்தின் தெருக்கூத்து ஆந்திரத்தின் வீதி ' நாடகத்தையும், கர்னாடகாவின் ' யட்ச்கான 'த்தையும் ஒத்திருக்கிறது.

இத்தகைய நாட்டுப்புறக் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. இருப்பவற்றை அழியாமல் காப்பதற்கு , இப்பொழுது தமிழக அரசு உதவியுடன் , " சங்கமம் " போன்ற விழாக்களைத் தமிழர்த்திருநாள் அன்று நடத்திவருகிறது. அரசுடன் சேர்ந்து நாமும், நமது பாரம்பரியக் கலைகளை அழியாமல் காப்போம்!

ஆயக்கலைகள்


ஆதித்தமிழன் கண்டறிந்து தலைமுறை தலைமுறையாய் பயின்று பாதுகாத்து மூத்தோர்கள் வகுத்தபடி வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் கணக்கிட்டு நமக்கு தந்துவிட்டு போன ஆயக்கலைகள் அறுபத்திநான்கு. அவற்றை உங்களுக்காக இங்கு தொகுத்து தருகிறேன். இதைத்தான் இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு நாம் மெடிக்கல் துறை என்றும் கட்டிட கலை துறை என்றும் ஆசிரிய துறை, அறிவியல், பொருளாதாரம் என்றும் ஒவ்வொன்றாக பிரித்து காலத்துக்கு ஏற்றவாறு தலைப்பை மாற்றி பயன்படுத்துகிறோம்.



1. எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு;
3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாஸ்திரம்);
8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);
10. யோக நூல் (யோக சாஸ்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு (காவியம்);
18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
20. நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
21. பாட்டு (கீதம்);
22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
24. யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
27. விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
39. காமம் (காம சாஸ்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்);
42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
44. பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
45. மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
47. கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
48. இழப்பறிகை ஃ களவு (நட்டம்);
49. மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
51. உடற் (தேகப்) பயிற்சி;
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);
54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
63. வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ்தலாவகம்);

திங்கள், 26 நவம்பர், 2012

தமிழ் மொழி வரலாறு

தமிழ் கலைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நிச்சயம் நாம் தமிழ் மொழி வரலாறு பற்றி தெரிந்திருக்க வேண்டும். தமிழின் கலைகள் என்பது மொழியின் வளர்ச்சியை உறுதி செய்வதாக இருந்தது. அது வளர்ச்சி நிலைகளை உலகெங்கும் கொண்டு சென்றது. ஆனால், மொழியின் பயன்பாடுகளை நாமே குறைத்துவிட்டோம் என்பதை ஏற்று கொண்டாலும்  நாமின்னும் செயல் பட ஆரம்பிக்கவேயில்லை. முற்றிலும் மறைந்துபோன ஹீப்ரு மொழியை யூதர்கள் எப்படி மீட்டெடுத்தார்கள் என்கிற கேள்வி உலகம் முழுமைக்கும் இன்னும் எதிரொளித்துகொண்டுதான் இருக்கிறது. 

 

ஒரு மொழியின் ஆரம்பம் தெரியாமல் அதன் ஆழத்தை பற்றி அளந்து கொண்டிருப்பதில் எந்த வித மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்பது மூத்தோர்களின் கருத்து. பெரும்பாலும் இந்த கருத்தைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம். ஆகவே, தமிழின் வரலாற்றை நம் சந்ததிகளுக்கு நிச்சயம் நாம் கொண்டு செல்ல வேண்டும். நமக்கு தெரிந்த உண்மைகள் நம்மோடு மண்ணாகி போய்விட நாம் ஒருக்காலும் அனுமதிக்க கூடாது. அனால், இதுகாறும் நாம் அதைத்தான் செய்து வந்திருக்கிறோம். அதனால், புரியும்படி இருக்கவேண்டும் என்பதற்காக "அகரமுதலி" செந்தமிழ் சொர்க்கலஞ்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட வரலாற்று வாக்கியங்களை உங்களுக்கும் பகிர்கிறோம்.

தமிழ் மொழி (Tamil languageதமிழர்களின் தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக்குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.  இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக அளவிலும், தென்னாப்பிரிக்கா, அமேரிக்கா, பிஜு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997 ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் மொழி தமிழ். ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய  மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. இவையனைத்தும் நம்மோடு இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதன் ரகசியம்தான் தாய் மொழி.

(நன்றி: அகரமுதலி)

இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.

பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
  • சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
  • சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
  • பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
  • மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)
  • இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)
பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

சொற்பிறப்பு

 

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார்.

தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர். சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

எழுத்துமுறை

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர்.

இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

எழுத்துக்களின் வகை
  • உயிர் எழுத்து
  • மெய் எழுத்து
  • எழுத்தோரன்ன குறியீடுகள் (ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்)
எழுத்துக்களின் விரிபு
  • ஒவ்வொரு பிறப்பிடமும் (எழுத்து) அவ்விடத்தைச் சார்ந்த பல்வேறு ஒலியம்களை குறிக்கும்.
எழுத்துக்களின் பெருகல்
  • உயிர்மெய் எழுத்து, 
  •  ஆய்தம் - ஆய்த எழுத்து.