திங்கள், 13 ஜனவரி, 2014

கலை விழா நடத்த உதவி




நம்முடைய திருவிழாக்களில் நாம் பார்த்து மகிழும் நாட்டுப் புறக் கலைகள் நமது முன்னோர்கள் நமக்கு தந்துவிட்டு சென்ற மிகப் பெரிய கொடை செல்வங்கள்.

 நம்முடைய கவலைகளை நாம் மறந்திருக்கவும் நம்முடைய இளம் தலைமுறையை நாம் சரியான முறையில் வழிநடத்தவும் நம்முடைய வீரதீர செயல்களை அடுத்த தலைமுறைக்கு நினைவுபடுத்தவும் நமக்கு கிராமிய கலைகளான தெருகூத்தும் நாடகங்களும்தான் பெரும்பாலும் கைகொடுத்தன. சுதந்திர போராட்டக் காலங்களில் இதுபோன்ற கலைகள் மூலமாகட நாம் எளிதில் மக்களிடம் நம்முடைய உணர்வுகளை கொண்டு சேர்க்க முடிந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் கண்முன்னே விரிந்து கிடந்த அந்த கலைகள் விவசாயத்தைப் போலவே விலகிப் போவதை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த கலைகள் நமக்கானவை, நம் சந்ததிகளுக்கானவை, அதை மீட்டெடுக்க வேண்டியது நம்முடைய கடமை.

திரை உலகமும், சின்னத்திரை நாடகங்களும் ஆக்கிரமித்துக் கொண்ட மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நிச்சயமாய் நாம் நம்முடைய பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும்.

நாட்டுபுற பாடல்கள், வில்லுப்பாட்டு, பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடி, தெருக்கூத்து, நாடகம், சிலம்பம், குத்து, தப்பு, புலியாட்டம் போன்ற நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளையும் பாடல்களையும் அருகிருந்து பார்க்கவும், பாதுகாக்கவும் நாம்தான் முயற்சிக்க வேண்டும்.

ஆகவே இசையோடும் பழம்பெரும் கலைகளோடும் இணைந்து இன்புற்றிருக்க உங்களுக்கு தோன்றினால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அவ்வைக் கலைக்கூடம்,
காட்டுமன்னார்கோயில்,

தொலைபேசி: 8220818381, 9840277737, 9962543148.

தை மகளே வருக



நமது அவ்வை கலைக்குழு சார்பாக அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளையும், திருவள்ளுவர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம். இந்த தினத்தில் அவ்வை கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி இமயம் தொலைக்காட்சியில் நடைபெற காரணமாயிருந்த நல்ல உள்ளங்களை ஆயிரமாயிரம் முறை பாராட்டினாலும்  ஈடாகாது என்றே சொல்லலாம். அந்த நல்ல உள்ளங்கள் நினைத்த வாழ்க்கை அமைய வாழ்த்துகளை  கூறிக்கொண்டு விடைபெறுவோம்.

கிராமிய இசை


நண்பர்களே!

இந்த ஆண்டின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக நமது அவ்வை கலை கூடத்தின் சார்பாக இமயம் தொலைகாட்சியில் நாளை காலையில் 7 மணிமுதல் 8 மணிவரை வழங்கப்பட இருக்கிற கிராமிய இசை நிகழ்வை அனைவரும் பார்த்து இன்புறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  மேலும் காலை 9 மணிமுதல் 11 மணிவரை அழிவை நோக்கி நகரும் நாட்டுப்புற கலைகள் பற்றியும் 15.12014 அன்று மாலை கிராமிய இசையும் மீண்டும் ஒளிபரப்பபட இருக்கிறது. கண்டு கேட்டு மகிழுங்கள்.


நன்றி

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சென்ற ஆண்டு நிகழ்வு



காட்டுமன்னார் குடியில் நடைபெற்ற நலிவுற்ற கலைஞர்களுக்கு  விருது வழங்கி சிறப்பிக்கும் விழாவில் தமிழ் பேராசிரியர் திரு குணசேகரன், திரைப்பட இசையமைப்பாளர் திரு சௌந்தர்யன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி செங்குந்தர் திருமண அரங்கில் நடைபெற்றது. இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை அவ்வைக் கலைக்கூடமும், பிரைட் மற்றும் பெஸ்ட் அறகட்டளை இணைத்து நடத்தியது.