ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தேவ தூதர்கள்


இயற்கை வளங்கள் அழிவதை எண்ணி ஒவ்வொரு நாளும் இயற்கை ஆர்வலர்கள் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உயிர்கள் வாழ காற்று அவசியம், அந்த காற்றில் உயிர் இருக்க வேண்டுமென்றால் மனிதர்கள் காற்றை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். நாம் அப்படியா மாசுபடுத்தாமல் இருக்கிறோம்?

நம்முடைய அத்தியாவசிய தேவைகளுக்காக நாம் இந்த உலகின் ஒவ்வொரு உறுப்பையும் கழிவுகளால் முடமாக்கி விட்டோம். எங்கு பார்த்தாலும் குப்பைகளால் நிறைந்திருக்கிறது நம் உலகம். எந்த நிமிடங்களிலும் அழுக்குகளோடும் அசிங்கத்தோடும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.


இவற்றிலெல்லாம் அக்கறை கொண்டு நமக்காகவும் நமது குழந்தைகளுக் காகவும் பொறுபெடுத்துக் கொண்டு இந்த உலகின் மீட்பை பற்றி சதாகாலமும் சிந்திக்கும் சில நல்ல உள்ளங்களை பார்க்கும் பொழுது நமக்கே நம் மீது ஒரு பிடிப்பு ஏற்ப்பட்டு விடுகிறதை மறுப்பதற்கில்லை.

அப்படி சில மனிதர்களை நான் சந்தித்ததில் குறிப்பிடத்தக்கவர்கள் தான் நவீன கழிவுகளை மறுசுழற்சி செய்து இயற்கை சமநிலையை பேணிகாப்பது குறித்து கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வரும் அப்துல் கனியும், குப்பைகளால் ஏற்ப்படும் கழிவுகளை அப்புறபடுத்தி உலகை அழகு மிக்கதாய் மாற்ற முனையும் நிஷா தொட்டாவும், மிகவும் அருகி வரும் பறவை இனமான குருகினங்களை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு துயரங்களையும் கிண்டல்களையும் புறந்தள்ளிவிட்டு உண்மை தொண்டு செய்யும் சாதனா ராஜ்குமார், ராதா கிருஷ்ணன் அய்யா போன்றோரும் அடங்குவர்.

நம்மோடு வாழும் காலத்தில் இவர்கள் செய்கிற சில நல்ல செயல்களால் எளிதில் உதாரணமாகி விடுகிறார்கள். இவர்களையெல்லாம் நாம் ஏன் நினைவில் வைத்திருக்க வேண்டுமென்றால்... இவர்கள் நம் பிள்ளைகளுக்கு முன்னோடியாக இருக்கிறார்கள். நமக்கு நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
நம் உலகின் பாதுகாவலர்களாய் பரிமளிக்கிரார்கள்.


உங்களுக்கு இவர்கள் எந்த நேரத்திலும் உதவ காத்திருக்கிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், இவர்களோடு இணைந்து செயல்படுவது மட்டுமே.

தொலைதொடர்புக்கு:

அப்துல் கனி - 9941006786

சாதனா ராஜ்குமார் - 9445249240

வேக சுகுமாரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக